Thursday, October 30, 2014

7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்.... வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!....

No comments :
 
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், 7 வயது சிறுமியின் வாயிலிருந்து சிறிதும் பெரிதுமாக முளைத்திருந்த 202 பற்களை அகற்றியுள்ளனர்.

குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும் பெரிதுமாக 202 பற்கள் வளர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பற்களை மிகவும் கவனமாக அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர், ‘பொதுவாக இத்தகைய பற்களின் வளர்ச்சியை காண முடியும். ஆனால், 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

சிகிச்சை மேற்கொண்ட சிறுமிக்கு தற்போது திரவ உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் அவளால் முன்பு போல உணவு சாப்பிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பாதிப்புடன் மும்பை மருத்துவமனைக்கு வந்த 17 வயது வாலிபரின் வாயிலிருந்து 232 பற்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ulaka seythikal, visiththira nooykal, vinotha seythikal, athika patkal konda sirumi,  vinotha pirachchanaikal, inthiya seythi, maruththuwam

No comments :

Post a Comment