Friday, October 31, 2014
பெண்ணை மானபங்கம் செய்த நடிகை சனா கான் நண்பருடன் கைது
பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், பாலிவுட் நடிகை சனா கான், அவரது நண்பர்
இஸ்மாயில் கான் ஆகியோரை மும்பை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக பூனம் கன்னா என்ற பெண்ணை சனா
கானும், இஸ்மாயில் கானும் கடந்த 21 ஆம் தேதி கைகளைப் பிடித்து முறுக்கி,
தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் எதிரான தகவல் பத்திரிக்கையில் வெளியானதற்கு அப்பெண்ணே காரணம்
என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் இப்பெண்ணை அழைத்து மிரட்டியதுடன் தகாத
முறையிலும் நடந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் மும்பை அம்போலி காவல்
நிலைய காவல்துறையினர் சனா கான், இஸ்மாயில் கான் ஆகிய இருவரையும் நேற்று
கைது செய்தனர். இருவர் மீதும் பெண்ணை மானபங்கம் செய்தல், உயிருக்கு
அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சனா கான் தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
nadikai kaithu, pennai manapankam seyhtha nadikai, mumpaiyil nadikai kaithhu, nadikai nanparudan kaithu, kolai miraddal viduththa nadikai,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment