Monday, October 27, 2014

நவம்பரில் தொடங்கப்படும் வடிவேலு நடிக்கும் எலி

No comments :
வடிவேலு அடுத்து நாயகனாக நடிக்கும் எலி படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்குகிறது. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
தெனாலிராமன் சுமாராகப் போனாலும் ஹீரோவாக நடிப்பது என்ற முடிவிலிருந்து வடிவேலு பின் வாங்கவில்லை. எலி படத்திலும் அவர்தான் நாயகன். அறுபதுகளில் நடப்பது போல் எலியின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஓஹோ பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையமைக்க கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் பிரமாண்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. தோட்டா தரணி இந்த அரங்குகளை அமைக்கிறார்.
நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் நவம்பரில் படப்பிடிப்பை தொடங்குவதில் படக்குழு உறுதியாக உள்ளது.

eli, nakaichuwai kathanayakan, cinema thakawal, vadiveluwin aduththa padam, eli padam

No comments :

Post a Comment