Monday, October 27, 2014
முருங்கைக்கீரை தோசை
தோசை மாவுடன், முருங்கைக்கீரை சேர்த்து தோசை தயார் செய்வதற்கு தேவையான பொருட்கள் வருமாறு:-
தோசை மாவு- தேவையான அளவு,
முருங்கைக்கீரை - ஒரு கப்,
நெய் - சிறிதளவு,
வெங்காயம்-1,
பச்சை மிளகாய்- 2,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:-
* முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
* வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும். சூடான நெய்யில் முருங்கைக்கீரையை போட்டு வதக்க வேண்டும்.
* கீரை நன்றாக வதங்கிய நிலையில், அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
* தேவையான உப்பையும் சேர்க்க வேண்டும்.
* வதக்கியதை தோசை மாவில் கொட்டி நன்றாக கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
* மாவை சரியான பதத்துக்கு கொண்டு வந்த பின்பு, தோசை கல்லில் ஊற்றி தோசையாக வார்த்து எடுத்தால், சுடச்சுட முருங்கைக்கீரை தோசை தயார் ஆகிவிடும்.
* முருங்கைக்கீரையில் பல்வேறு சத்துகள் அடங்கி இருப்பதால், இந்த தோசையின் மகத்துவத்தைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. எனவே வாரத்துக்கு ஒரு நாளாவது தயார் செய்து சாப்பிடலாம்.
murunkai keerai thoosai, thoosai samaipathu eppadi, samaiyal kurippu, murunkai keerai unawu, keerai thoosai, aarokiya unawu.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment