Tuesday, October 28, 2014
வருகிறது Li - Fi மின்னொளி மூலமாகவே இன்டர்நெட் வசதி & அசத்தல் வசதி
வருகிறது Li - Fi
இன்டர்நெட் வசதியைப் பெறுவதற்கு, வைஃபை (Wi - Fi) எனும் வொயரில்லா தொழில்நுட்பம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதன் இன்னொரு வடிவமான, லைஃபை (Li - Fi) பற்றித் தெரியுமா? இது, மின்னொளி மூலமாகவே இன்டர்நெட் வசதியைத் தரக்கூடிய சாதனம். இதற்காகவே விசேஷ எல்.இ.டி மின்விளக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது, செகண்டுக்கு 150 மெகாபைட் வேகத்தை வழங்கக் கூடிய தன்மைகொண்ட சிப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒளி மூலமாக மிக எளிதில், மிக வேகமான இன்டர்நெட் இணைப்பை பெற்று பயன்படுத்த முடியும்.
முழுக்க ஒளி மூலமே கடத்தப்படுவதால், ஒளிபரவும் இடத்தில் மட்டுமே இன்டர்நெட் இணைப்பைப் பெறமுடியும். 'வைஃபை’யில் பாஸ்வேர்டு போடாவிட்டால், அடுத்த வீட்டில், மேல்மாடியில் இருப்பவர்கள் எல்லாம் ஓசியில் மஞ்சள் குளிப்பது போல இதில் குளிக்க முடியாது. குறைந்தது 4 பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'லை-ஃபை', விரைவில் கூடுதல் மெருகோடு விற்பனைக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
அசத்தல் வசதியோடு ஐபோன் '6+ ’
ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் தன் புதிய ரக செல்போன்களான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ஆகியவற்றை அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, ஐபோன் 6+ ல், 16 ஜிபி முதல் 128 ஜிபி வரை மெமரி பயன்படுத்தும் வசதி, 6.22 இன்ச் உயரம், 3.06 இன்ச் அகலம், 172 கிராம் எடை, 5.5 இன்ச் தொடுதிரை, 8 மெகாபிக்ஸல் கூடுதல் வசதியுடன் கூடிய கேமரா, கைரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் வசதி... என எக்கச்சக்கமான வசதிகள் உள்ளதால், விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே மொத்தத் தயாரிப்பும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்தகட்ட விற்பனைக்காக காத்திருக்கிறார்கள் மக்கள். கூடிய விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ள இந்த செல்போனின் விலை 45,500 ரூபாயில் இருந்து தொடங்கலாம் எனத் தெரிகிறது.
minnoli moolam inaiyam, puthiya tholilnudpam, puthiya kandupidippu, ilakuwana inaiyam, puthuwitha inaiya thodarpu,
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment