Monday, November 10, 2014

உடம்பில் வலி ஏற்படாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!!!

No comments :
 
 
வயதாக வயதாக நம் உடம்பில் வலிகளும் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. மேலும் நாள்பட்ட வலிகளும் நம்மைக் காலம் பூராவும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.
வலிகளில் மிகவும் கொடுமையானது உறுப்புகளுக்கிடையே ஏற்படும் வலிகள் தான்! தோள்கள், முழங்கைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுகள் ஆகியவற்றில் இந்த வலிகள் ஏற்படும். வயதான காலத்தில் இது மிகவும் கொடுமையாக இருக்கும்.
ஆரம்பத்திலேயே வலிகளின் தன்மையை அறிந்து, அதற்கேற்றவாறு முதலுதவியோ, சிகிச்சையோ எடுத்துக் கொள்வது நல்லது. வரும் முன் காப்பது நல்லது அல்லவா? ஆகவே வலிகளை அகற்ற சில டிப்ஸ்களை கொடுக்கிறோம். அதைப் படித்து அதன்படி முயற்சித்துப் பாருங்கள்!
அடிப்படை வலி நிவாரணிகளுக்கான சில அடிப்படை விஷயங்களை முதலில் சிறிது சிறிதாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வலிக் குறிப்புகள் உங்களுடைய வலி பற்றிய விவரங்களையும், நீங்கள் அதற்கு அளிக்கும் சிகிச்சைகளையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் அது மீண்டும் உதவும்.
ஆய்வு உங்கள் உடம்பை அடிக்கடி செக்கப் செய்து கொள்வது அவசியம். எந்த அளவுக்கு வலிகள் இருக்கின்றன, அடுத்து என்ன சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் ஆகியவை பற்றி ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
காந்த சிகிச்சை எலும்பு தொடர்பான வலிகளுக்கு காந்த சிகிச்சை மிகவும் சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது.
தண்ணீர் அவசியம் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்து இருக்கும் போது தான் பெரும்பாலும் எலும்பு தொடர்பான வலிகள் ஏற்படுகின்றன. நிறைய நீர் எடுத்துக் கொள்வது இதற்கு மிகவும் நல்லது.
நிலை அதேபோல் குண்டக்க மண்டக்க நிலைகளில் நிற்பது, நடப்பது, உட்காருவது, படுப்பது ஆகியவையும் வலிகளை அதிகரிக்கின்றன. இவற்றைத் தவிர்த்தாலும் உடம்பில் வலிகள் குறையும்.
காலணிகள்கால்சியம் 40 வயதுக்கு மேல் மாதவிடாய் சுழற்சிகள் நின்றதும், பல பெண்களுக்கு எலும்பு குறைபாடு ஏற்படக் கூடும். எலும்பு வளர்ச்சிக்குக் கால்சியம் எந்த அளவுக்கு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். எனவே கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு முக்கியம். 
இரும்பு, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவுகளும் நல்லது.
கால்சியம் 40 வயதுக்கு மேல் மாதவிடாய் சுழற்சிகள் நின்றதும், பல பெண்களுக்கு எலும்பு குறைபாடு ஏற்படக் கூடும். எலும்பு வளர்ச்சிக்குக் கால்சியம் எந்த அளவுக்கு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.
எனவே கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு முக்கியம். இரும்பு, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவுகளும் நல்லது.
 
புரதம் புரதச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். அதே நேரம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் மிகவும் நல்லது.
 
ஆலிவ் எண்ணெய் மசாஜ் தோள்கள், முழங்கைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுகள் ஆகியவற்றில் அதிக வலி ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதால், அவற்றை ஆலிவ் எண்ணெய் கொண்டு அடிக்கடி மெதுவாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். மசாஜ் செய்யும் போது, இதயம் இருக்குமிடத்தை நோக்கி உடம்பை அழுத்தி விடுவது நல்லது.
 
udal aarokkiyam, udal nalan, maruththuwam, udal vali etpadamal irukka,

No comments :

Post a Comment