Saturday, November 1, 2014

6 வயது இந்திய சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை !!

No comments :
 
 
நேபாள நாட்டில் உள்ள மலைச்சிகரத்தில் ஏறி ஆறு வயது இந்திய சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகன் ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6 வயது சிறுவன் தான் இந்த சாதனையை புரிந்துள்ளான். இந்த மலைச்சிகரம் 5,554 மீட்டர் உயரமானது.
இதில் ஏறுவதற்காக அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் சென்றான். கடந்த 7ம் திகதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில் சென்று இறங்கினான்.
அங்கிருந்து 10 நாட்களில் அவன் கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தான். இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்திய சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியது தான் சாதனையாக இருந்தது. அதனை ஹர்ஷித் முறியடித்துள்ளான்.
இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. கின்னஸ் சாதனைக்காகவும் இந்த ஆதாரங்களை அனுப்ப உள்ளதாக அவனது தந்தை தெரிவித்துள்ளார்
 
ulaka seythikal, athisaya thakaval, ulaka sathanai, siruwanin ulaka sathanai, nepalam,  malaisikaram thodda siruwan

No comments :

Post a Comment