Saturday, November 1, 2014
கம்ப்யூட்டரில் உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமையான வழி

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பயம் இருந்துகொண்டே
இருக்கும். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் வைரஸ் பிரச்னை வந்துவிடும்.
முக்கியமாக கம்ப்யூட்டரில் வைத்திருக்கும் ஆவணங்களை கோப்புகளை பதம் பார்த்துவிடும்.
ஒரு சிலர் எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு ஆபிஸ் டாக்குமெண்ட்டோ அல்லது
ஏதேனும் ஒரு படமோ இப்படி உருவாக்கிய ஆவணத்தை சேமிக்கும்பொழுது தானாகவே
டீபால்டாக மை பிச்சர் போல்டர், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேமிக்கப்படும்
.
பிரச்னை என்னவென்றால் இவ்வாறுக C டிரைவில் சேமிக்கப்படும் கோப்புகள்
பாதுகாப்புக்கு உகந்ததல்ல..என்பதுதான்.
எப்படியென்றால் ஏதாவது ஒரு சமயத்தில் உங்களுடைய கம்ப்யூட்டரை பார்மட் செய்திடும்பொழுது, C டிரைவிலுள்ள கோப்புகள் அனைத்துமே அழிந்துபோய்விடும்.
பார்மட் செய்திட்ட பிறகு அந்த கோப்புகளை மீண்டும் எடுக்கவே முடியாது.
அதுசரி.. மைடாக்குமெண்ட், மைபிக்சர், மை ஸ்கேன், மை மியூசிக், மை வீடியோஸ் (My Document, My Picture, My Scan, My Music, My Videos) போன்ற போல்டர்களெல்லாம் சி டிரைவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.
அதை உங்களுடைய விருப்பத்திற்கு தகுந்தவாறு மற்ற டிரைவ்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக My documents போல்டரை நீங்கள் சி டிரைவிலிருந்து D டிரைவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வழிமுறை:
முதலில் My Documents போல்டரின் மீது ரைட் கிளிக் செய்யுங்கள்.
இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்
டார்கெட் என்ற இடத்தில் உங்களுக்கு எந்த டிரைவில் போல்டர் இடம்பெற வேண்டுமோ அதை உள்ளீடு செய்யவும்.
பிறகு Move என்பதைக் கொடுத்தால், அந்த போல்டரானது D டிரைவிற்கு மூவ் ஆகிவிடும்.
இனி நீங்கள் சேமிக்கும் எந்த ஒரு டாக்குமெண்டும் தானாகவே டி டிரைவில் உள்ள போல்டரில் சேமிக்கப்பட்டுவிடும்.
tholinudpa thakawal, kananiyil unkal aawanankalai paathukaakka, kanai pawikum pothu kawanikka wendiyawai, aawanapathukaappu, kanani,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment