Saturday, November 1, 2014

முடி உதிர்வதை தடுக்க முடியும் :-

No comments :
 
‘ஆண், பெண் யாரா இருந்தாலும் சரி, சின்ன வயசுலயே அவங்களுக்கு தலையாய பிரச்னையா இருக்கறது முடிதான். ஆமா, முன் மண்டை அல்லது நடுப்பகுதில ஆண்களுக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கறதுனா, ஆண்கள் மாதிரி மீசை, தாடி வளர்றது பெண்களுக்கு பிரச்னையா இருக்கு.

சில ஆண்களுக்கு மீசை, தாடி முளைப்பது கூட சிக்கலா இருக்கும். இதுக்காக கவலைப்பட வேண்டியதில்ல. இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது’’ ‘‘முடி வளராம இருக்க நிறைய காரணங்களை சொல்லலாம்.

உணவுல குறைபாடு, தண்ணீர், பொடுகு, ஷாம்பு... இப்படி பட்டியல் போடலாம். ஆனா, முடி உதிர இது எதுவுமே காரணமில்லை. ஹார்மோன் குறைபாடுதான் முடி உதிர காரணம். ஒரு முடியோட வளர்ச்சி, அதனோட மயிர்கால்களோட ஆரோக்கியத்தை பொறுத்திருக்கு.

மயிர்கால்கள் ஆரோக்கியமா இருக்கணும்னா, உடல் உறுப்புகள்ல சுரக்கிற ஹார்மோன்களின் உதவி வேணும். ஊட்டச்சத்தும், வைட்டமினும் இரண்டாம்பட்சம்தான். முடி வளர்ச்சிக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தேவை.

இது ஆண்பால் ஹார்மோன். ஆனா, இந்த ஹார்மோன் பெண்களுக்கும் சுரக்கும். என்ன... குறைந்த அளவுல பெண்களுக்கு சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்புல பிரச்னை இருந்தா, ஆண்களுக்கு வழுக்கை விழும். ஆனா, மீசை மற்றும் உடற்பகுதில முடி வளர்ச்சி அடர்த்தியா இருக்கும். இந்தப் பிரச்னை பெண்களுக்கும் ஏற்படும்.

ஆனா, முன் மண்டைல வழுக்கை ஏற்படறதுக்கு பதிலா தலைல ஆங்காங்கே முடி கொட்ட ஆரம்பிச்சு, கடைசில மொட்டை அடிச்சா மாதிரி ஆகிடும். பெண்களுக்கு சுரக்கக் கூடிய ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன், தேவையான அளவு சுரக்காம, ஆண்களின் ஹார்மோனான ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவுக்கு அதிகமா சுரக்கறதுனால ஏற்படற பிரச்னை இது.

சினைமுட்டைல பாலிசிஸ்டிக் ஓவரி இருந்தா ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோன் அதிகமா சுரக்கும். இந்தப் பிரச்னைக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கிட்டா நாளடைவுல குணமாகும்.

புரதம் நிறைந்த பருப்பு, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, பால், எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்’’ என்கிறார்

தைலம் தயாரிக்கிற முறை ;

‘செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ரெண்டு லிட்டர் வாங்கிக்கணும். வெள்ளைக் கரிசாலை, குமரி கற்றாழை, கீழாநெல்லி, அவுரி இவை எல்லாத்திலயும் ஒரு படிச்சாறு எடுத்துக்கணும். கூடவே 250 மி.லி. கறிவேப்பிலை சாறு எடுத்து நல்லா பதமா காய்ச்சிக்கணும். முடி வளர மூலிகைத் தைலம் ரெடி. சூட்டு உடம்பா இருந்தா, கொஞ்சம் நெல்லிக்காய்சாறும் சேர்த்துக்கலாம். மூக்கடைப்பு சைனஸைடிஸ் இருக்கிறவங்க, இந்த சாறோடு அகில்கட்டை, சுக்கு போட்டு 500 மி.லி. கஷாயமா செஞ்சு வெச்சுக்கலாம். இந்தத் தைலம் அதுக்கும் மருந்தாயிடும். இந்த மாதிரி செய்த தைலம் தேய்ச்சு குளிச்சால், உடலில் பித்தம் தணியும். வயித்து வலியை உண்டாக்கும் குடல்புண்களையும் கூட சீக்கிரமா ஆற்றிடும். சும்மா மேம்போக்கா, தலைக்கு எண்ணெயை காட்டக் கூடாது; நல்லா தேய்க்கணும். குறைஞ்சது 5 மணி நேரமாவது தலையில் இந்த எண்ணெய் இருக்கணும். ரொம்பத் தலை பிசுபிசுப்பு இருந்தால், சீயக்காய்பொடி தேய்ச்சுக்கலாம்.” முடி உதிர்வதை தடுக்கலாம்.
 
alakukurippu, thlaimudi uthirwu, ilakualaku, mudi uthirwathai thadukka, thalai mudi paramarippu

No comments :

Post a Comment