Saturday, November 1, 2014
சொந்தத் தயாரிப்பு, இரண்டு ஜோடிகள் - ஹீரோ சந்தானம் மீண்டும் பராக்...

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்தான் சந்தானம் தனி ஹீரோவாக நடித்த முதல் படம்.
திரையில் நாம வந்தாதான் கைத்தட்டுறாங்க, நம்ம காமெடியை வச்சுதான் படமே
ஓடுது, விஜய் டிவி காம்பியர் சிவ கார்த்திகேயனே ஹீரோவாக நடிக்கும் போது
லொள்ளு சபா ஹீரோ நாம, சினிமாவில் ஹீரோவா நடிச்சா ஏத்துக்க மாட்டாங்களா
என்றுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தையே தொடங்கினார். அப்போது
அவரது பேச்சும் மேலே குறிப்பிட்டது போலவே இருந்தது.
படம் மொத்தமாக ஊத்திக் கொண்டதும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற தனது
சொந்த ஆப்பை தானாகவே உருவிக் கொண்டார். வழக்கம் போல காமெடி வேடங்களில்
நடித்தார். ஆனாலும் ஹீரோ ஆசை உடனே போவதற்கு அது ஒன்றும் ஆடையில் பட்ட
கறையில்லையே. மனசில் விழுந்த வடுவாச்சே.
தனது ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பில் புதிதாக ஒரு படத்தை தயாரிக்கிறார்.
லொள்ளு சபா இயக்குனர் முருகா - ஆனந்த் இருவரும் இணைந்து படத்தை
இயக்குகின்றனர். அஷ்னா சரி, அகிலா கிஷோர் என்று இரண்டு நாயகிகள்.
முந்தையப் படம் போல் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சிக்காமல் தனக்குத் தொரிந்த காமெடி நடிப்பை படம் முழுக்க தர தயாராக இருக்கிறாராம்.
ஸோ, சந்தானம் இஸ் பேக்.
kathanayakanakum nakaichchuwai nadikar, kathanayakan, nakaichcuwai nadikar, meendumkathanayakan, sontha thayarippil kathanayakan, irandu joodikal, thirai thakawalkal,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment