Tuesday, November 4, 2014

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

No comments :
 
சிறுநீரகம் என்பது நம் உடலில் உள்ள மிக முக்கியமான அங்கமாகும். மேலும் நம் உடலில் நடக்கும் முக்கியமான செயல்பாடுகளுக்கும் அது பொறுப்பாகும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த பல வழிகள் உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவுகளும் கூட அதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்கும்.
சிறுநீரகத்திற்கு நல்லதை ஏற்படுத்தும் உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா? சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி, நோய்கள் அண்டாமல் இருக்க நமக்கு உதவிடும் சில உணவுகளைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அதன் ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் பார்க்கையில், அது சிறுநீரகத்திற்கு பலனை அளிப்பதோடு நிற்காமல், உடலில் உள்ள பிற உறுப்புகளுக்கும் நன்மையை தேடி தரும்.
சிறுநீரக பிரச்சனைகளால் நம் உடலுக்கு ஏற்படும் சீரழிவைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இதனை மனதில் கொண்டு, சிறுநீரக செயல்பாடுகளுக்கு நன்மையை அளித்திடும் உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
இரத்தத்தை சுத்தரிப்பது சிறுநீரகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இல்லாமல், மற்ற உறுப்புகள் ஒழுங்காக செயல்படுவதற்கான சாத்தியம் இல்லை. சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்பட தொடங்கினால், நாளடைவில் பிற உறுப்புகளின் செயல்பாடும் சீர்குலைந்துவிடும்.
இப்போது சிறுநீரகத்திற்கு நன்மையை அளித்திடும் அவ்வகை உணவுகளைப் பற்றி சற்று பார்க்கலாம். இவ்வகை உணவுகளை இரண்டாக வகைப்படுத்தலாம் - சிறுநீரக நோய்களுக்கு தீர்வை அளித்திடும் உணவுகள், சிறுநீரகங்களின் செயல்பாடுகளுக்கு நன்மையை அளித்திடும் உணவுகள்.
முட்டைக்கோஸ் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது முட்டைக்கோஸ். அதிலுள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், பிற உறுப்புகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.
புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராட உதவும் ஃபோலேட் மற்றும் ஃபைடோகெமிக்கல்கள் இதில் வளமையாக உள்ளது. இதுப்போக முட்டைக்கோஸில் வைட்டமின் கே, பி12, பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் டையட்டரி நார்ச்சத்து ஆகியவைகளும் இருப்பதால் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு இது ஒரு சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது.
ஆப்பிள் உலகத்தில் உள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஆப்பிளும் ஒன்று என்பதை சுலபமாக சொல்லி விடலாம். சக்தி வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பி குணங்களும் இதில் அடங்கியுள்ளது. சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறுநீரக அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளித்திடவும் கூட ஆப்பிள் உதவுகிறது.
பீட்ரூட் உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தின் அளவுகளை பராமரிக்கும் திறனை பீட்ரூட் கொண்டுள்ளது என்பது தெரிந்த விஷயமே. பீட்ரூட்டில் வைட்டமின் பி6 மற்றும் கே அடங்கியுள்ளதால், சிறுநீரக செயல்பாடுகளுக்கு அது சிறந்த உணவாக விளங்குகிறது.
திராட்சை திராட்சையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும் முக்கியமான வைட்டமின் இது. ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான முக்கியமான கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.
முட்டைகள் முட்டையில் புரதம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளது. முட்டையின் வெள்ளை கருவில் புரதம் வளமையாக உள்ளது. கூடுதலாக அதிமுக்கிய அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளது.
பால் பாலில் வைட்டமின் டி வளமையாக உள்ளது. நம் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமான வைட்டமின் இதுவாகும். சிறுநீரகங்களுக்கு மட்டுமல்லாமல் சீரான இரத்த ஓட்டத்திற்கும் பால் உதவிடும்.
தண்ணீர் கடைசியாக, மிகவும் அத்தியாவசியமான ஒரு உணவுப்பொருள் தான் தண்ணீர். எந்த ஒரு உறுப்புக்கும் சிறந்த கூறாக இருப்பது தண்ணீரே. அதனால் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை.
ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு தினமும் குறைந்தது 3 லிட்டர் அளவிலாவது தண்ணீர் குடியுங்கள். 
 
maruththuwa kurippukkal, aarokkiyam, udal nalan, sirunerakaththia pathukaaka, saththulla unawukal, unawupalakka,

No comments :

Post a Comment