Monday, November 3, 2014
ரஜினியின் லிங்கா டீசர் வெளீயிடு; ரசிகர்கள் உற்சாகம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி
சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர
தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக
நடிக்கிறார்கள்.
குணச்சித்தரவேடங்களில் ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் டீசர் எனப்படும் முன்னோட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக இன்று பெரும் எதிர்பார்க்கிடையில் வெளியாகி உள்ளது.
இந்த டீசரில் ரஜினிகாந்த் தோற்றம் மற்றும் அவரது ஸ்டைல்,மற்றும் வீரம்
அவர்களது ரசிகர்களை உற்சாக கடலில் ஆழ்த்தி உள்ளது.டீசர் வெளியான சில
நிமிடங்களில் சமூக வளைதளங்களான பேஸ்புக்,வாட்ஸ் அப்,யூடியூப் ஆகியவற்றில்
களைகட்டி உள்ளது.
இந்த டீசர் 41 நொடிகள் மட்டுமே வரும் இதை பார்க்கும் ரஜினி ரசிகர்கள்
உற்சாகத்தின் எல்லைக்கே இட்டு சென்றுவிடும் அந்த அளவிற்க்கு இந்த டீசர்
உருவாக்கபட்டுள்ளது.
ரஜினிகாந்த் லிங்கா படத்தில் இருவேடங்களில் நடித்திருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.படத்திற்க்கு இசையமைபாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
linka munnoddam, thirai thakawal, rasikarkal utsakam, linka,puhiya padam,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment