Saturday, November 1, 2014

ஸ்டைலான ரஜினி, கிக்கான சோனாக்ஷி - வெளியானது லிங்கா டீஸர்

No comments :
லிங்கா படத்தின் டீஸர் இன்று மாலை யூ டியூபில் வெளியிடப்பட்டது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் டீஸரை இன்று மாலை வெளியிடுவதாக திடீரென அறிவித்தனர். அதன்படி டீஸர் வெளியிடப்பட்டது. டீஸரில் படம் டிசம்பரில் வெளியிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த டீஸரில் ரஜினியின் இரு வேடங்களும் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக சுதந்திரப் போராட்ட காலக்கட்ட ரஜினியின் தோற்றமும் ஸ்டைலும் அட்டகாசம். சண்டைக் காட்சி, நடனக் காட்சி, ரஜினி ஸ்டைலாக நடந்து வரும் காட்சி என்று ரஜினி ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் டீஸரை அமைத்துள்ளனர்.
லிங்கா குறுகிய காலத் தயாரிப்பு என்பதால் பிரமாண்டமாக இருக்காது என்ற எண்ணத்தையும் டீஸர் போக்கியுள்ளது. மிகப் பிரமாண்டமான செட்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை என ஒவ்வொரு ப்ரேமும் பிரமாண்டத்தால் இழைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கால ரஜினிகாந்த் அப்படியே இளமையாக இருக்கிறார் என்று டீஸரைப் பார்க்கும் ஒருவர் சொல்லக் கூடும். அவருடைய நடிப்பு, செய்கை என்று அனைத்துமே அந்தக் காலம் போலவே மாறாமலிருக்கிறது.
தோற்றம் மாறாமலிருப்பது நல்லது. நடிப்பும் அப்படியே இருக்கலாமா? கொஞ்சம் வித்தியாசத்தை காட்டுங்க சூப்பர் ஸ்டார். போரடிக்கப் போகுது.
linka, thirai thakawal, puthiya padam, linka thiraipadam, pirammaandam,

No comments :

Post a Comment