Sunday, November 2, 2014
சித்தரின் ஜீவசமாதி -- மிஸ்டிக் செல்வம் ஐயா
.jpg)
ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள்
இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது
தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு
முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது
ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து
ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.
இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய்
தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது
பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.இந்த மூன்று
இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக்
கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை
நிறைவேறியதாக எண்ணுங்கள்.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து
நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே
மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.
ஜீவ சமாதியிடத்தில்
தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின்
பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை
சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு
கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள்
தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு
திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா
கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை
நூல் திரியில் ஏற்றுவது நன்று.
அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.
இப்படித்தான் காரியம் சாதித்தேன்
என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர
பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.
இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!
சித்தர்களின் ஜீவசமாதி
சித்தர்களின் ஜீவ சமாதி பீடமே கலியுகத்தில் வணங்கத்தக்க
இடமாகும்.ஏனெனில்,பிரபஞ்ச ஆற்றலை (இறைசக்தியை)
இப்பூமியில் நிரந்தரமாக நிலைப்படுத்தி வைத்துள்ள இடமே
சித்தர்களின் ஜீவசமாதி பீடங்களாகும்.
தற்போது உள்ள பழங்கோவில்கள் எல்லாம் சித்தர்களின்
மறைவிடங்களே.அவர்களின் ஜீவசமாதி மீது தான் புகழ் பெற்ற
கோவில்கள் அமைந்துள்ளன என்பது உண்மை.அவர்களின்
ஆற்றலே அங்கு பிரகாசிக்கிறது.
திருமலை திருப்பதி - சித்தர் மகான் கொங்கனவர்
பழனி மலை முருகன் -- சித்தர் மகான் போகர்
சித்தர்களின் ஜீவசமாதியை வணங்கினால் ஆண்டவனை
வணங்கியதாகும். ஆண்டவனை வணங்கினால் அவர்களை
வணங்கியதாகும். அங்கு சென்று ஊணுருக, உயிருருக,விழி கசிய தியானிப்போர்க்கு அப்பீடத்தில் குடி கொண்டிருக்கும்
சித்தர் பெருமக்கள் தாம் பெற்றுள்ள பேராற்றலால் பக்தர்கள்
குறையை போக்கி,நல்வழி அருளுகிறார்கள்.
இது முற்றிலும் உண்மை.
அனைத்திற்கு அப்பாலும், அனைத்திலுமாய் நின்று இப்பிரபஞ்சங்களை
தம் விருப்பம் போல் படைத்து-இயக்கும் பரம்பொருள், ஞானிகளின்
உள்ளே நடம் புரிகிறார்.
சிற்பங்கள் கட்டின கோவிலிலே அங்குத்
தற்பரன் வாழ மாட்டான்- குதம்பாய்
தற்பரன் வாழ மாட்டான்.
சித்தர்கள் ஞானிகள் ஜீவசமாதியில்
தற்பரன் நித்யம் தாண்டவம் புரிவானடி-குதம்பாய்
தாண்டவம் புரிவானடி.-குதம்பை சித்தர்.
ஞானிகளை சத்திய நிலையில் தெளிந்தறிதலினால் பரம்பொருளை
அறிய முடியும். பரம்பொருளை அறிந்துணர சித்தர்களின்
ஜீவசமாதியை பூஜிக்க வேண்டும்.
புண்ணிய பூமி, வேதபுரி என காலங்காலமாக,அகத்தியர்
முதல் அரவிந்தர் வரைஅனைவரையும் அரவணைத்து அவர்களின்
அருள் சாதகத்திற்கு,இறை சாதகமாக்கிய நம் புதுவை
மண்ணில் ஜீவ சமாதியாகியுள்ள சித்தர்கள் அநேகபேர்.
அவர்களில் பிறமதத்தினரும் உண்டு என்பதுவும் நம்
மண்ணின் பெருமை.
இவ்விதம் நமக்கு தெரிந்தும் இன்னும் தெரியாத பல
சித்தர்கள் உலவி,தம் அருள் ஆற்றலால் புண்ணியமாக்கிய
பூமிதான் நம் புதுவைமண்.இப்படி புதுவையிலும் அதை
சுற்றியுள்ள பிற இடங்களிலும் உள்ள சித்தர்களின் ஜீவ
பீடத்திற்குச் சென்று வழிபட்டு அவர்களின் பேரருளை
பெறுவோமாக..
aanmeekam, thamil kaddurai, siththar, samathi, siththarin samathi, selwam iyaa,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment