Monday, November 10, 2014

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

No comments :
 
 
அனைவருக்குமே வெள்ளையான சருமத்தின் மீது ஆசை இருக்கும். இதற்காக தங்களின் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு வழிகளை மேற்கொண்டிருப்போம். இப்படி வெள்ளை சருமத்தின் மீது மோகம் அதிகரிக்க காரணம், கருப்பாக இருந்தால், யாரும் மதிப்பதில்லை.
இவ்வுலகில் சற்று மதிப்பும், மரியாதையும் வேண்டுமானால், புத்திசாலித்தனம் மட்டுமின்றி, சற்று வெள்ளையாக இருக்க வேண்டியதும் ஒன்றாகிவிட்டது. இதற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று நிறைய பணம் செலவழித்து தங்களின் அழகை பராமரித்து வருவார்கள்.
மேலும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி செய்தால், சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் இயற்கை அழகு தான் பாழாகுமே தவிர, வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு ஒருசில வழிகள் உள்ளன. அதனை தவறாமல் பின்பற்றி வந்தால், உங்களின் சருமத்தின் நிறத்தை அதிகரித்து, அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆரஞ்சு தோலை நன்கு வெயிலில் உலர வைத்து, அதனை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமைகளானது மறைய ஆரம்பித்து, முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவையும் நீங்கிவிடும்.
தக்காளி, தயிர் மற்றும் ஓட்ஸ் ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பால், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு சிறு பௌலில் பால், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதுடன், சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு ஃபேஷியல் மாஸ்க் உருளைக்கிழங்கை சாறு அல்லது பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.
எலுமிச்சை சாறு ஃபேஷியல் எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதனை முகம், கை, கால் போன்ற இடங்களில் தடவி 5-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த ஃபேஷியல் செய்த பின்னர் வெயிலில் செல்லக்கூடாது. ஒருவேளை அப்படி சென்றால், சருமம் மேலும் கருமையாவதுடன், அரிப்புக்கள் ஏற்படும்.
தக்காளி ஜூஸ் ஃபேஷியல் தக்காளி ஜூஸை சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் ஃபேஷியல் மாஸ்க் இந்த ஃபேஷியல் செய்வதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி, சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் முகத்தை நீரில் கழுவிவிட்டு, ஈரமான முகத்தில் கலந்து வைத்துள்ள கலவையை தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
பப்பாளி ஃபேஷியல் பப்பாளியை அரைத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவலாம் அல்லது பப்பாளியை சாறு எடுத்து, அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம். இதனால் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிப்பதைக் காணலாம்.
எலுமிச்சை தோல் ஃபேஷியல் எலுமிச்சை பழத்தின் தோலை துருவி, நன்கு வெயிலில் உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் சிறிது எலுமிச்சை தோல் பொடியை போட்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பின்பு குளிர்ந்த பாலைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தாலும், சருமத்தின் நிறமானது அதிகரிக்கும்.
 
alakukurippu, saruma alakitku, sarumaththai venmaiyakka, vediil seya kodiya alaku sathanam, ilakuwan alaku sathanam

No comments :

Post a Comment