Saturday, November 1, 2014

தென் ஆப்பிரிக்க போட்டியில் ஆடும் தெண்டுல்கர் மகன்

No comments :


மும்பையை சேர்ந்த வோர்லி கிரிக்கெட் கிளப் அணி நாளை (2-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் உள்ள முன்னணி பள்ளி அணிகளுடன் விளையாடுகிறது. 45 ஓவர்கள் கொண்ட 10 ஆட்டங்களில் வோர்லி கிளப் அணி விளையாட திட்டமிட்டுள்ளது.

16 முதல் 18 வயது பிரிவு வோர்லி கிளப் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் இருக்கிறார். அவர் தலைமையில் வோர்லி கிளப் அணி இந்த போட்டி தொடரில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு வோர்லி கிளப்பில் இடம் பிடித்து இருந்த அர்ஜூன், தென் ஆப்பிரிக்கா போட்டி தொடரில் அதிக ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vilaiyaddu seythikal, thuduppaddam, thuduppaadda verarin mahan, aappirikka poddiyil sachchinin mahan, 

No comments :

Post a Comment