Monday, November 3, 2014
இந்தியாவில் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றி

இந்தியாவில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு செய்யப்பட்ட உலகின் முதல் சிஒய்டி-டிடிவி(CYD-TDV) டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவு நேர்மறையாக அமைந்ததால், இந்தியாவில் டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக டெங்கு தடுப்பூசியை தயாரித்த சனோபி பாஸ்டர் நிறுவனம் அளித்த தகவலில், டெல்லி, லூதியானா, பெங்களூரு, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு சோதனை முயற்சியாக டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சோதனையின் முடிவில் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நலமுடன் இருந்தனர். இதனால் இச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த தடுப்பூசி, 'பாதுகாப்பானதாகவும், டெங்கு எதிர்ப்பாற்றலை' கொண்டுள்ளதாகவும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சனோபி பாஸ்டர் நிறுவனத்தின் டெங்கு தடுப்பூசி திட்டத்திற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தலைவர் டாக்டர் நிகோலஸ் சார்லஸ் தெரிவிக்கையில், 'இந்திய அதிகாரிகள் எங்களை டெங்கு தடுப்பூசி சார்ந்த ஆய்வு மேற்கொள்ள கேட்டுகொண்டதன்பேரில், நாங்கள் இந்த சோதனையை செய்தோம். இந்த சோதனை முடிவுகள் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
சனோபி நிறுவனம் இந்த சோதனை முடிவை, மலேரியா மற்றும் பரவக்கூடிய நோய்கள் மற்றும் புறப்பரவியல் நிபுணர்களின் வருடாந்திர மாநாட்டில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ulakaseythi, denku thaduppoosi, indiya vin kandupdidppu, thaduposi, soothanai vetti
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment