Sunday, November 9, 2014
அஜீத் மீது விஜய் ரசிகர்கள் ஆத்திரம்

அஜீத் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
கத்தி படம் பற்றிதான் ஊரெங்கும் பேச்சு. சமூக வலை தளங்களிலும் அது பற்றிய
விவாதங்கள்தான். ஆஹா… என்று ஒரு குரூப்பும் ஐயே…என்று இன்னொரு குரூப்பும்
அடித்துக் கொள்ள, முழுவேகமாக ஆக்ரமித்திருந்தார் விஜய்.
எவ்வித அவசியமும் இல்லாமல் அங்குதான் மூக்கை நுழைத்தார் அஜீத்.
தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் தலைப்பை வெகு காலமாகவே அறிவிக்காமல்
வைத்திருந்தவர், கத்தி வெளியான ஐந்தாவது நாளில் அறிவிக்க, கத்தியை விட்டு
விட்டு என்னை அறிந்தால் என்ற அஜீத் படத்தின் தலைப்பை பற்றியே பேச
ஆரம்பித்துவிட்டார்கள்.
ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் கத்தியை ஒரேயடியாக சாய்த்துவிட்டு இடம்
பிடித்துக் கொண்டது என்னை அறிந்தால். நேரடியாக மோதலாம். அதைவிட்டுட்டு
இப்படி நல்ல புள்ளையாச்சும் கொல்ல பக்கம் குழிபறிச்சா? என்று குமுற
ஆரம்பித்திருக்கிறார்கள்.
சினிமாவுல அரசியலும், அரசியல்ல சினிமாவும் சகஜமாயிருச்சுப்பா
aaththiram, rasikarkal, aaththirathil narikarkal, thirai ththakawalkal,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment