Sunday, November 9, 2014
வேகமாக பரவி வரும் ”மெர்ஸ்” என்னும் உயிர் கொல்லி நோய்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி
நூற்றுக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட ‘சார்ஸ்’ கிருமிக்கு இணையான
”மெர்ஸ்” என்னும் கிருமியின் தாக்கம் வேகமாக பரவி வருவதுடன் நூற்றுக்கும்
அதிகமான உயிர்களை இதுவரை காவுகொண்டுள்ளது.
இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும்
சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும்
ஏற்படுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நோய் கிருமி கண்டறியப்பட்டாலும்
இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் ‘மெர்ஸ்’ மர்ம நோய்
தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமான் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின்
மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டது.
இந்த நோய் மத்தியக் கிழக்கு நாடுகளில் முதலில் காணப்பட்டதால் அவ் நோயை
தோற்றுவிக்கும் வைரஸ் (Middle East respiratory syndrome coronavirus -
MERS-CoV) ” மெர்ஸ்” என பெயரிட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி
உள்ளனர். சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்,
பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ்
வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற
பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
சாதாரண சளியுடன் இணைந்த தொற்று வகையைச் சேர்ந்த இந்த நோய்த்தொற்று
ஏற்பட்டால் வெகுவிரைவில் சிறுநீரக இழப்பு ஏற்படலாம் என்பது
குறிப்பிடத்தக்கது.
சவுதி தலைநகர் ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாம் நகரங்களில் மெர்ஸ் நோய்க்கான
சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150 பேர்
தங்கி சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்நோயினை உரிய
முறையில் கட்டுப்படுத்த தவறிய அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி
அப்துல்லா அல்-ராபியா கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த கிருமியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த இருவர் இந்த நோய்க்கு பலியானதாக சவுதி அரசு கடந்த வாரம் அறிவித்தது.
அது மட்டுமின்றி 2 வெளிநாட்டினர் உள்பட 14 பேர் இந்நோய்க்கான சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மேலும் 5 மெர்ஸ் நோயாளிகள் பலியாகினர். அவர்களில் 2 பேர் சவுதிஅரேபியாவை சேர்ந்தவர்கள், 2 பேர் பாலஸ்தீனியர்கள் மற்றும் ஒருவர் வங்காள தேசத்தை சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தலைநகர் ரியாத்தை சேர்ந்த ஒரு குழந்தை, ஜெட்டா நகரை சேர்ந்த 3 பேர் உள்பட மேலும் 8 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் பலியானதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் பரவி வருகிறது. இதனால் நேற்று வரை 109 பேர் பலியாகி உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சவுதி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜெட்டாவில் 25 வயது வாலிபர் ஒருவர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறந்தார்.
இதேபோல் காசநோய், அனிமியாவால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் மெக்காவில் காலமானார். இவர்களுடன் சேர்த்து மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 396 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.இதற்கிடையில் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் 4 டாக்டர்கள் பணியை ராஜினாமா செய்து விட்டனர். நோயாளிகளிடம் இருந்து தங்களுக்கும் வைரஸ் தொற்றி கொள்ளும் என்ற பயத்தில் டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் ஒட்டகங்கள் மூலம் மெர்ஸ் வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இதனால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
uyirkolli nooy, maruththuwam, aarokkiyam, udal nalan, vekamaka parwum nooy, uyikolli
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment