Sunday, November 9, 2014

காதலியை கொலை செய்து கொடூரமாக சாப்பிட்ட காதலன்....

No comments :
 
  

பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது காதலியின் முகத்தை கடித்து சாப்பிட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பிரித்தானியாவின் சியர்பில்லி (Caerphilly) பகுதியில் உள்ள சிர்ஹோவி ஆர்ம்ஸ் ஹொட்டலில் (Sirhowy Arms Hotel) மேத்யூ வில்லியம்ஸ் (Mathew williams Age-34) என்ற நபர் தங்கியிருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்துள்ள இவர், தான் தங்கியிருந்த அறையில் வைத்து செர்யிஸ் எம் (Cerys yemm Age-22) என்ற இளம்பெண்ணை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் அவரது கண்விழிகளை பிடுங்கி சாப்பிட்டது மட்டுமின்றி முகத்தையும் கடித்து தின்று கொண்டிருந்தார்.
அப்போது ஹொட்டல் பாதுகாவலர்கள் அவரின் அறைக்குள் நுழைந்த போது, அவர் பெண்ணின் மாமிசத்தை சாப்பிடுவதை பார்த்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், துப்பாக்கிச்சூடு நடத்தி வில்லியம்சை கைது செய்ய முயன்றபோது அவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் வில்லியம்ஸும், கொல்லப்பட்ட பெண்ணும் காதலித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
 
ulaka seythi, kaathaliyai konra kathalan, penai konru thinra kaathalan, kathaliyay thinra kaathalan

No comments :

Post a Comment