Wednesday, January 28, 2015

எளிதான முறையில் ஈரல் மற்றும் கணையத்திலிருந்து நச்சுக்கழிவுகளை நீக்கும் மற்றொரு முறை

No comments :

இந்த முறையில் தயாரித்த கஞ்சியை தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் எளிதான முறையில் ஈரல் மற்றும் கணையத்தின் நச்சுக்கழிவுகளை நீக்கி ஆரோக்கியமாக வாழலாம். இந்த கஞ்சி உடலின் கொலாஸ்ட்ராலையும் குறைத்து மலச்சிக்கலிலிருந்து விடுதலை தருகிறது. மற்றும் இதயத்தின் இயக்கத்தை சீராகவும், நரம்பு மண்டலங்களை ஆரோக்கியமாக செயல்படுத்துவதால் மருத்துவர்கள் இதனை தினமும் குடித்து பயன்பெறுமாறு பரிந்துரைக்கின்றனர்.
தேவையானவை:
12 அவுன்ஸ்அல்லது 350 மில்லி சுடு நீர்
1.5 டேபிள்ஸ்பூன் ஓட்ஸ்
எவ்வாறு செய்வது:
ஓட்ஸை தண்ணீரில் அலசி கொள்ளவும். பிறகு அதனை பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் இட்டு கொதிக்கும் சுடு நீரை ஒட்ஸின் மேல் ஊற்றவும். இதை 12 மணி நேரம் குறையாது இரவு முழுவதும் ஊற விடவும்.
அடுத்த நாள் இந்த கஞ்சி தயாராகி விடும். கஞ்சியை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும், தினமும் ஒரு கிளாஸ் (8 அவுன்ஸ அல்லது 230 மில்லி) காலை மற்றும் மாலை தினமும் உணவுக்கு முன்பு மிதமாக சூடாக்கி குடிக்கவும். முழுப்பயனைப் பெற ஒரு வருடம் குடிக்க வேண்டும்.
தயாரிக்க எளிதான கஞ்சியை பிரயாணங்களிலும், வெளியூர் செல்லும் சமயங்களிலும் சிரம்மின்றி தயாரித்துக் கொள்ளலாம்.

aarokkiya vaalakai, elimaiyana maruthuwam, eeral mattum kanaiyai suththa paduththa, nachchu kaliwai nenkum eliya murai

No comments :

Post a Comment