Wednesday, October 29, 2014
தரவரிசையில் விரட்டியடிக்கப்பட்ட கோஹ்லி
சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி பின்னடைவை சந்தித்துள்ளார்.
சர்வதேச ஒரு நாள் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை நேற்று ஐ.சி.சி., வெளியிட்டது.
தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர்
முடிந்ததை தொடர்ந்து இந்த தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதன்படி துடுப்பாட்ட தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை
பிடித்து இருக்கிறார். இந்திய வீரர் விராட் கோஹ்லி ஒரு இடம் பின்தங்கி 3வது
இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணித்தலைவர் டோனி 6வது இடத்தில் தொடருகிறார். ஷிகர் தவான் இரு இடம் சரிந்து 9வது இடம் பெற்றுள்ளார்.
பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் சயீத்
அஜ்மல் உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் நரைன், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன்
2,3வது இடத்தை வகிக்கின்றனர்.
இந்தியாவின் சுழல் வீரர் ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் முறையே 6,7வது இடத்தில் நீடிக்கின்றனர்.
அணிகளுக்கான தரவரிசையை பொறுத்தவரை தென் ஆப்ரிக்க அணி ஐந்து
ஆண்டுகளுக்குப்பின் முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. இதற்கு முன், கடந்த
2009 செப்டம்பரில் முதலிடத்தில் இருந்தது.
அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
vilaiyaddu sethikal, thuduppada seythikal, vilaiyaaddu verar sarpana seythikal, vilaiyaaddu, thuduppadam, seythikal
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment