Wednesday, October 29, 2014

பிபா சிறந்த வீரர் விருது: ரொனால்டோ, மெஸ்ஸிக்கு வாய்ப்பு

No comments :
 
பிபா சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில், இந்த ஆண்டு 23 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த ஆண்டு இந்த விருதை வென்ற போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார்.
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி அணி தரப்பில் மரியா கோட்சே, தாமஸ் முல்லர் உள்ளிட்ட 6 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விருதை ஏற்கனவே 4 முறை வென்றுள்ள அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரான்சின் கரீம் பென்சிமா, பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர், நெதர்லாந்தின் ராபென் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
ரொனால்டோ மூன்றாவது முறையாக விருது வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரம், மெஸ்ஸி ஐந்தாவது முறையாக தட்டிசெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் சிறந்த வீரரை, தேசிய கால்பந்து அணி அணித்தலைவர்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பர்.
வெற்றியாளர் பெயர் அடுத்த ஆண்டு ஜனவரி 12ல் ஜூரிச்சில் நடக்கவுள்ள விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படும்.

vilaiyadu seythikal, uthai panthaadda seythikal, uthai panthadda verar, sirantha kaal panthu verar viruthu, kaal panththu

No comments :

Post a Comment