Tuesday, October 28, 2014

நம் முன்னோர் கட்டிய உருமாலைக்குப் பின் ஒளிந்திருக்கும் ரகசியம்.!!

No comments :
நம் மரபுகளை நன்கு உணர்ந்து பின்பற்றி வரும் பலர் இருந்தாலும், மேற்குநாட்டு கலாச்சாரம் மற்றும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட 'சிலர்' நம் நாட்டு மரபுகளையும் கலாச்சாரத்தையும் பிற்போக்கு என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றான நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பான உருமாலை கட்டை பற்றி பார்ப்போம். கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தலை சூடாவது அனைவரும் அறிந்ததே.

நமது மூளை தலைக்குள் ஒரு திரவத்தின் உள்ளே மிதந்து கொண்டிருக்கிறது. அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் மூளை கோளாறு வரை அனைத்து வகை பாதிப்புக்களும் வெப்ப அயர்ச்சியால் மூளை சாவும் கூட ஏற்பட வாய்ப்புண்டு. அந்த திரவ படிமம் தலையின் முன்பாகம் (நெற்றி) துவங்கி பின்னால் வரை படர்ந்து உள்ளது.

உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தி நூலால் நெய்யப்பட்ட துண்டை கொண்டுதான் கட்டப்படும். உருமாலை கட்டு சரியாக அந்த திரவம் உள்ள பகுதிகளை முழுமையாக மூடிவிடும்.

அதுவுமன்றி வெள்ளை நிறம் என்பதால் தலையில் விழும் அனைத்து சூரிய வெப்ப கதிரையும் திருப்பி அனுப்பி விடும் ( வெள்ளை நிறம் வெப்ப ஒளிக்கற்றைகளை 100% Reflect பண்ணும் இயல்புடையது ).

அதுவுமன்றி ஈர்க்கப்படும் சிறு அளவு வெப்பமும் தலைக்குள் செல்லாதவாறு பல அடுக்கு பருத்தி துண்டு பார்த்துக்கொள்ளும். தலைக்கு காற்றோட்டம் நன்றாக கிடைக்கும் பருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, ஈரத்தை / வியர்வையை உறியும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை கட்டுவோருக்கே தெரியும்

நம் முன்னோர்கள்.நமது தலையை சூரியனின் வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காகவே கண்டுபிடித்ததுதான் இந்த உருமாலை கட்டு இன்று கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் நம்மை அடிமையாக வைத்திருந்த வெள்ளைக்காரன் அறிமுக படுத்தியதுதான்

தொப்பிகள் தலையை கவ்வி நிற்கும் காற்றோட்டம் கிடையாது குளிர்சியற்ற தன்மை மற்றும் அதை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை விட நமது உருமாலை எவ்வளவோ மேல். மேலும் தொப்பிகள் பெரும்பாலும் வெள்ளை நிறம் அல்லாது பிற வர்ணங்களிலேயே வருகிறது.

நமது நாடு வெப்ப பிரதேசம் கொண்டது பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிவது நமது உடல்நலனுக்கு மிகவும் ஏற்றது

தொப்பிகள் பருத்தியால் அதிகமாக நெய்யப்படுவதில்லை ( கதர் குல்லாய் இதற்கு விதி விலக்கு ) உருமாலை கட்டும்போது கிடைக்கும் பெருமித உணர்வுக்கென்றே கட்டலாம்
urumalai, munnor vingnanam, urumalai rakasiyam, thamilar kandupidippu, thamil munnor kandupidippu.

No comments :

Post a Comment