Tuesday, October 28, 2014
ஹேப்பி நியூ இயர் – திரை விமர்சனம்

இந்த சேப்டி லாக்கரை அனுபம் கெர் தனது கை ரேகையை வைத்து மட்டுமே திறக்கும் வகையில் செய்திருந்தார். லாக்கரை ஜாக்கி ஷெராப்பிடம் ஒப்படைக்கும்போது, உங்களின் கை ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
ஆனால் ஜாக்கி ஷெராப், அனுபம் கெருக்கு மயக்க மருந்து கொடுத்ததுடன், லாக்கரில் உள்ள 100 கோடி வைரத்தையும் திருடி விட்டதாக பழி சுமத்தி அவரை ஜெயில் அடைத்து விடுகிறார். அந்த வைரத்தை ஜாக்கி ஷெராப்பே எடுத்துக் கொண்டு வைரம் தொலைந்து விட்டதாக நாடகம் ஆடி வைரத்திற்கான இன்சூரன்ஸ் பணத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் பணக்காரராகிறார்.
இதை அறிந்த ஷாருக்கான் ஜாக்கி ஷெராப்பை பழி வாங்க நினைத்து லாக்கரில் இருக்கும் வைரத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். தற்போது வைரங்கள் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலின் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஓட்டலின் ஒரு அறை வழியாக அந்த பள்ளத்திற்கு செல்லலாம் என்பதையும் ஷாருக்கான் அறிகிறார்.
இந்நிலையில் அந்த ஹோட்டலில் உலக அளவிலான நடனப்போட்டி நியூ இயர் அன்று நடந்தப்படவுள்ளதை தெரிந்துக் கொள்கிறார் ஷாருக்கான். இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு அந்த வைரத்தை கொள்ளையடிக்க ஷாருக்கான் நினைக்கிறார். இதற்காக அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா ஆகியோர் கொண்ட ஒரு நடன டீம் ஒன்றை உருவாக்குகிறார்.
இவர்களின் உதவியால் ஜாக்கி ஷெராப்பின் பாதுகாப்பில் இருக்கும் வைரத்தை கொள்ளையடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ஷாருக்கான் திருடனாக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் மற்றப் படங்களில் இருந்து வேறுபடுகிறார். நடனம், காதல், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே அழகு பதுமை. இவரும் நடனம் கவர்ச்சி என ரசிகர்களை கவர்கிறார். அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா, அனுபம் கெர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விஷால் தட்லானி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல்களும் பிரம்மிக்க வைக்கிறது.
விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசிக்கும்படி இயக்கி அதில் இசை, நடனம், சண்டைக் காட்சிகள் என நல்லதொரு பொழுதுபோக்கு படமாக உருவாக்கிய இயக்குனர் ஃபரா கானை பாராட்டலாம்.
மொத்தத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ ரியலி ஹேப்பி.
kinthi pada thirai vimarsanam, thiraipada thakawal, thirai vimarsanam, puthu pada vibaram,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment