Thursday, October 30, 2014
ரஹ்மானின் புகழுக்கு என்ன காரணம்..? இதப்படிங்க

ரஹ்மானின் உலகளாவிய புகழுக்கு என்ன காரணம்...? பாஸ்டன் பல்கலைக்கழகத்தின்
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற போது அதனை மறைமுகமாக ரஹ்மானே
தெரியப்படுத்தினார்.
புகழ்பெற்ற பாஸ்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர்
பட்டம் அளித்து கௌரவப்படுத்தியது. அதற்கான விழா பாஸ்டன் பல்கலையின் ஓர்
அங்கமான பெர்க்லீ இசைக்கல்லூரியில் நடந்தது.
விழாவில் பேசிய ரஹ்மான், 1989 -இல் எல்.சங்கர் இசையமைப்பாளரிடம்
பணியாற்றிக் கொண்டிருந்த போது பெர்க்லீ கல்லூரி குறித்து அறிந்தேன். அதில்
சேர்ந்து படிக்க ஆசைப்பட்டேன். அப்போதுதான் மணிரத்னத்தின் ரோஜா பட வாய்ப்பு
வந்தது. பெர்க்லீயா, ரோஜாவா என்ற தேர்வில் பெர்க்லீயை தவறவிட
வேண்டியதாயிற்று. தற்போது இங்கிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்றாவது
ஒருநாள் பெர்க்லீ கல்லூரியில் சேர்ந்து பயில்வேன் என்றார்.
இசையின் சிகரத்தில் வீற்றிருக்கிற நிலையிலும் படிக்க வேண்டும், புதிதாக
கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் ரஹ்மானின் இன்றைய உலகளாவிய
புகழுக்கு காரணம் என்றால் மறுக்க முடியுமா?
pukalukku kaaranam, vetti pera, isaiyamaippaalarin vettiku karanam, paaraddu vila, isaiyamaippalaruku viruthu
pukalukku kaaranam, vetti pera, isaiyamaippaalarin vettiku karanam, paaraddu vila, isaiyamaippalaruku viruthu
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment