Thursday, October 30, 2014
ஒரே மேடையில் தோன்றவிருக்கும் கமல், ரஜினி மோகன்லால், மம்முட்டி, அமிதாப்பச்சன்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவிட மண்டபத்தை கர்நாடக அரசே 7 கோடி
செலவில் அமைத்துள்ளது. பெங்களூரு கண்டீரவா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள
இந்த நினைவுமண்டபத்தில் ராஜ்குமாரின் வெண்கல சிலையையும்
நிர்மாணித்துள்ளனர். இந்த நினைவிடத்தின் திறப்புவிழா நவம்பர் 29 -ஆம் தேதி
நடக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள இந்தியாவின் முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்ப கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கமல், ரஜினி, மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment