Tuesday, October 28, 2014

தன் தாய்க்குக் கோவில் கட்டும் ராகவா லாரன்ஸ்

No comments :

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், இன்று (29.10.2014) தனது பிறந்த நாள் அன்று, தம் தாய் கண்மணிக்காகக் கோயில் கட்டத் தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தன் தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவச் சிலையை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளார். அதை பற்றி அவர் கூறியதாவது.... தாயின் மனமே ஒரு கோயில். தான் அந்தத் தாய்க்கு, அந்தத் தாய் வாழும் போதே கோயில் கட்டிப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்தக் கோயிலை கட்ட உள்ளேன். என் தாய்க்கு மட்டும்மல்ல, உலகத்தில் உள்ள எல்லா தாய்மாருக்கும் நான் இதைச் சமர்ப்பிக்கிறேன். அப்படிப்பட்ட அந்தத் தாய், என்னை வளர்ப்பதற்காகப் பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக, அடுத்த வருடம் எனது பிறந்த நாளான இதே தேதியில் அந்தக் கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன் என்றார் ராகவா லாரன்ஸ்.


 thaykku kovil kaddum nadikar, thaaykku kovil, ammawuku aalayam amaikkum nadikar, annaiku aalayam, thayin kovil, thirai seythi, puthiya muyatsi, thaayin mel konda anpu,

No comments :

Post a Comment