Tuesday, October 28, 2014

இயற்கை வைத்திய குறிப்புகள் :-

No comments :
மாம்பழம்;

முக்கனியில் முதன்மையானது. இதில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

வாழைப் பழம்;

தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

உடல் அரிப்பு குணம் பெற;

வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

சுகப்பிரசவம் ஆக;

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

வெட்டுகாயம் குணமாக;

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசி வர விரைவில் ஆறிவிடும்.

உடல் சக்தி பெற;

இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

முகம் வழுவழுப்பாக இருக்க;

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகும் முன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு பெரும்.

இரத்த சோகையை போக்க;

பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.

கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது;

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம் கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

குழந்தைகளுக்கு;

குழந்தைகளுக்கு கொள்ளாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

காதில் சீழ்வடிதல் குணமாக;

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப் படுத்தவும் காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

நெஞ்சுவலி குணமாக;

அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

சிலந்தி கடிக்கு மருந்து;

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

சீதபேதி குணமாக;

புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக;

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.

காதுவலி குணமாக;

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

நுரையீரல் குணமாக;

நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

வாதநோய் குணமாக;

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

காலரா குணமாக;

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

மலச்சிக்கல் சரியாக;

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மேகரோகம் குணமாக;

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக;

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

இரத்த பேதியை குணப்படுத்த;

அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.

மூட்டுவலி குணமாக;

அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க;

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பற்கள் உறுதியாக இருக்க;

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக;

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

ஆண்மை குறைவு நீங்க;

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த;

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக;

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.


iyarkai vaiththiya kurippu, iyarkai maruththuwam, unawil ulla maruththuwam, veeddu waiththiyam, kai marunthu, iyarkai marunthu, ilaku waiththiyam, valamay waala

No comments :

Post a Comment