Monday, November 3, 2014

விமானத்தை 5 மணி நேரம் தடுத்து நிறுத்திய எலி

No comments :

நார்வே நாட்டில் உள்ள ஓஸ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது விமானி அறையில் எலி ஒன்று ஓடியதை பைலட் கண்டுபிடித்தார். உடனே விமானம் நிறுத்தப்பட்டது.

எலியை பிடிப்பதற்கு பாதுகாவலர்கள் முயற்சித்தனர். அது அங்கும், இங்கும் ஓடி அவர்களை அலைக்கழித்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலி அவர்களிடம் பிடிபட்டது.

இதனால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக நியூயார்க் புறப்பட்டு சென்றது. அதுவரை பயணிகள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். விமானத்தில் எலி இருந்தால் அதில் எந்திர பகுதிக்குள் சென்று ஒயர்களை கடித்து சேதப்படுத்தும் வாய்ப்பு உண்டு. அப்போது விமானம் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். இதை தடுக்கவே எலியை பிடித்த பிறகே விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது.

eli, ulaka seythikal, vimanaththai niruththiya eli, vimanam, eliyi sakasam, 

No comments :

Post a Comment