Saturday, November 1, 2014

நம்ம ஊரு வைத்தியம் வெந்தயம்

No comments :
 
வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா… மஞ்சள், மிளகு, கடுகு, வெந்தயம்னு அஞ்சறைப் பெட்டியில இருக்கற எந்த பொருளா இருந்தாலும், அதை நல்லா தூய்மைப்படுத்தி பயன்படுத்தினா… அதோட பலனே வேற. அந்த வகையில, இந்தத் தடவை வெந்தய மகிமையைப் பார்க்கலாமா!

அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் மாதிரியான சமாசாரங்கள் உங்க பக்கமே தலைவெச்சு படுக்காது.

அரை ஸ்பூன் வெந்தயத்தை வேக வெச்சு, அதோட கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தா… தாய்ப்பால் அதிகமா சுரக்கும். வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காய வெச்சு தூளாக்கிக்கோங்க. இதை காலை, மாலை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தா… மதுமேகம் (சர்க்கரை நோய்) தாக்கம் குறைஞ்சு, நாளடைவில நல்ல பலன் கிடைக்கும்!

தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தா… சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் இல்லாதவங்களும் இப்படி சாப்பிட்டு வரலாம். இதனால எந்த எதிர்விளைவும் இருக்காது!

வாய்ப்புண், வயித்துப்புண் தொந்தரவு இருக்குதா? ஒரு இளநீரை வாங்கி, அதுல ஓட்டைப் போட்டு, ஒரு கைப்பிடி வெந்தயத்தை உள்ள போட்டு மூடிடுங்க. ராத்திரியில அதை மொட்டை மாடியில பத்திரமா வெச்சு, காலையில அந்த வெந்தயத்தை சாப்பிடறதோட… இளநீரையும் குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.

இப்படியெல்லாம் வெந்தயத்தை சாப்பிட விரும்பாதவங்க… தோசை, களினு பலகாரங்களா செய்தும்கூட சாப்பிடலாம். வெந்தயக்குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதன் மூலமாவும் நல்ல பலன்களை அடையலாம்!
 
venthayaththin payan, venthayam, maruththuwam, iyarkai marunthu, kai marunthu, thamil maruththuwam, vaiththiyam, sakkarai nooy, veeddu maruththuwam

No comments :

Post a Comment