Saturday, November 1, 2014
பெங்களூர் உள்ளிட்ட 12 நகரங்களின் பெயர்கள் மாற்றம் - மத்திய அரசு ஒப்புதல்

பெங்களூர், மைசூர் உள்ளிட்ட 12 கர்நாடக நகரங்களின் பெயர்கள் கன்னடப்
பெயர்களாக மாற்றி கர்நாடக மாநில அரசு நேற்றிரவு அறிவிக்கை வெளியிட்டது.
இதையடுத்து பெங்களூர் உள்ளிட்ட 12 நகரங்களின் பெயர்களை லேசான மாறுதலுடன்
கன்னடப் பெயர்களாக மாற்றி அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக வருவாய்
துறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
இதன்படி, பெங்களூர் - பெங்களூரு, மங்களூர் - மங்களூரு, பெல்லாரி - பல்லாரி,
பிஜாப்பூர் - விஜயபுரா, பெல்காம் - பெலகாவி, சிக்மகளூர் - சிக்கமகளூரு,
குல்பர்கா - கலபுர்கி, மைசூர் - மைசூரு, ஹோஸ்பேட் - ஹொசப்பேட்டே, ஷிமோகா -
ஷிவமொக்கா, ஹூப்ளி - ஹுப்பள்ளி, தும்கூர் - துமகூரு ஆகிய நகரங்களின்
பெயர்கள் கன்னடத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு கன்னட எழுத்தாளர்கள், மொழி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ulaka seythikal, peyar maattam, oorkalin peyarkal matam, inthiya seythi, nakarankalin perkal maattam,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment