Friday, November 14, 2014

மூல நோய்க்கு தீர்வு

No comments :
 
 
மூலத்தை உள்மூலம், வெளிமூலம் என பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். மூலத்திற்கு முதல் காரணம் மலச்சிக்கல். உண்ணும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே மூலம் வராது. மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது.
நாட்பட்ட மலச்சிக்கலால் ஆசனவாயிலுள்ள ரத்த நாளங்கள் பருத்து குழாய்களில் ரத்தம் தேங்கி விடுகிறது. இப்படி ரத்தத்தில் தேக்கப்பட்ட இரத்த கசடுகள் பிறகு மூலமுளைகளாக மாறி விடுகிறது. கல்லீரலில் உள்ள ரத்த குழாய்கள் தங்களுடைய வேலைகளைச் சரிவர செய்யாவிடில் ஆசனவாயிலுள்ள நாளங்களில் இரத்த தேக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது மூலமுளையாக மாறிவிடுகிறது.
மேலும் பெண்கள் கருத்தரித்துள்ளபோது கர்ப்பப்பையை மலக்குடல் அழுத்துவதாலும், தாய் தந்தை வழியாகவும், பட்டினி கிடத்தல், பசியின்மை இவை போன்றவற்றால் கீழ் நோக்கி மலத்தை தள்ளும் வாயு தன்னுடைய வேலையை சரியாக செயல் புரிய முடிவதில்லை. யோகநிலையில் தன்வன்மைக்கு மீறி இருப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. மீண்டும் மலம் மலக்குடலில் இருப்பது போன்ற உணர்வு, ஆசன வாயில் எரிச்சல், காந்தல் வலி, உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாதது, சோம்பல், துன்பங்களில் மனம் வளர்ந்து அடிக்கடி கோபம் கொள்ளுதல் போன்றவை ஏற்படும்.
உள்மூலம் இருப்பதற்கான அறிகுறிகள் :-
உள்மூலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து உடல் வெளுத்து காணப்படுவர். பசியின்றி இருப்பார். மலத்துடன் இரத்தம் வெளியேறும். சிலநேரங்களில் உடல் சூட்டினால் கூட இரத்தம் வெளியேற வாய்ப்புள்ளது. மூலமானது ஆசனவாயின் உட்புறத்தில் தசைபோன்று வளர்ந்திருக்கும். மலம் வெளியேறும்போது மிகுந்த இறுக்கத்துடனும், வலியுடனும் காணப்படும். சில சமயங்களில் வயிற்று வலி ஏற்ப்படும்.
வெளிமூலத்தின் அறிகுறிகள் :
வெளிமூலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்றி, அமைதியின்றி மிகுந்த களைப்புடனும் சோகத்துடனும் காணப்படுவர். மூலம் வெளியே தள்ளிக் காணும். அடிவயிற்றில் இரைச்சல், தொப்புளைச் சுற்றி வலி, மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தால் நிச்சயமாக மூலம்தான்.
உணவு வகைகள் :
தினசரி உணவு வகைகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவிற்கு பின் ஏதாவது ஒரு பழவகையை சேர்த்துக் கொள்ளலாம். தினம் 2 மொந்தன் வாழைப்பழம் சாப்பிடலாம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பகலில் மோரும், இரவில் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். இளநீர், எலுமிச்சைப்பழம், நெய், வெண்ணெய், நெய்யில் வதக்கிய வெங்காயம், கருணைக்கிழங்கு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் :
கருணைக்கிழங்கு தவிர அனைத்து கிழங்கு வகைகள், பாசிப்பயிறு தவிர அனைத்து பயிர்வகைகள், முட்டை முதல் அனைத்து அசைவ உணவுகள், காரம், மசாலாப் பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
பகலில் தூக்கம், புகைபிடித்தல், மது வகைகள், வெயிலில் அதிகம் செல்வது, காற்றுப் புகாத கடினமான இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
மருத்துவ முறைகள் :
தமிழக அரசின் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் மூல நோய்க்கு சித்த மருந்துகள் எளிதாக கிடைக்கிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருத்துவம், வெளி மருத்துவம் என ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
மூல நோயின் உச்சகட்டமாக மூலாதாரத்தில் காந்தல்,எரிச்சல் ஆகியவை ஏற்படும். சின்ன, பெரிய வெங்காயத்தின் சருகுகளை நூல் துணிகளில் உள்ளே வைத்து தலையணை போல் தைத்து, நாம் உட்காரும்போது மல வாய்க்கு ஏற்ற அளவு தைத்து தினமும் உட்கார்ந்து வர நோய் தீரும்.
சோற்றுக்கற்றாழையின் மடலை மேல்தோலை சீவி எடுத்துக் கொண்டு பளபளப்பாக இருக்கும் அதை மலவாயில் வைத்து இரவில் கட்டிக் கொண்டு காலையில் எடுத்துவிட மூலம் சுருங்கி விடும்.
நம்முடைய முன்னோர்கள் மாதத்திற்கு சில நாட்களில் கடவுள் பெயரால் விரதம் இருக்கச் சொல்வார்கள். இது மிகப் பெரிய மருத்துவம். லங்கணம் பரம ஔஷதம் என்பார்கள். சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பது போல நம்முடைய குடலையும் அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும். அதற்கு செலவில்லாத மிகப்பெரிய மருத்துவம் விரதமிருத்தல் என்கிற பெயரில் சாப்பிடாமலிருத்தல். வாரத்தில் ஒருநாள் ஒருவேளை மட்டுமாவது விரதமிருக்கவேண்டும்.
இறுதியாக மூல நோய்க்கு ஆங்கில மருத்துவத்தை விட சித்த /ஹோமியோ/இயற்கை மருத்துவமே சிறந்தது.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் !
 
moola nooy, maruththuwam, aarokkiyam, noykana therwu, moolam, aarokkiyam, udal nalan

No comments :

Post a Comment