Wednesday, November 12, 2014
ஒரு கேட்சுக்கு 2433 டாலர் பரிசுப் பெற்ற கிரிக்கெட் ரசிகர்
நியூசிலாந்தில் அருமையாக கேட்ச் பிடித்த ரசிகருக்கு 2433 டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் அந்நாட்டு ஓடாகோ
வோல்ட்ஸ் அணிக்கும் வெலிங்டன் அணிக்கும் இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
நடைபெற்றது.
அப்போட்டியில், ஓடாகோ வோல்ட்ஸ் அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தை சிக்சருக்கு விளாசினார்.
அப்போது மைதானத்தின் எல்லைக்கோட்டுப் பகுதியில், தனது சகோதரருடன் போட்டியை
ரசித்து கொண்டு இருந்த மெக்கல்லோஹ் என்ற கிரிக்கெட் ரசிகர், ஓடி வந்து
பந்தை தனது ஒரு கையால் லாவகமாக பிடித்தார்.
மெக்கல்லோஹ் பிடித்த இந்த கேட்சுக்கு 2433 டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்குப் பின்னர் பதிலளித்த மெக்கல்லோஹ், தான் இந்த தொகையை கிரடிட்
கார்டுக்கு பணம் கட்டவும், வெளிநாட்டில் வசிக்கும் தனது சகோதரருடன் ஆறு
மாதம் தங்குவதற்கும் செலவிடப்போவதாக கூறினார்.
athistam, oru pidikku panam, thuduppaaddam, thudupada rasikar, panthaipidiththa rasikar
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment