Monday, November 3, 2014

ஆரஞ்சு போன்ற கன்னங்களைப் பெற ஆரஞ்சு பழ ஃபேஸ் பேக் போடுங்க...

No comments :
 
 
தற்போது ஆரஞ்சு பழத்தின் சீசன் என்பதால் அந்த பழமானது விலை குறைவில் கிடைக்கும். ஆகவே தவறாமல் இந்த பழத்தை அன்றாடம் வாங்கி சாப்பிடுங்கள். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, சருமமும் பொலிவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
அதற்கு இந்த பழத்தை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அதனைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தாலும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழமானது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் சருமத்தின் இளமையைப் பாதுகாப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு பளிச்சென்று வெளிக்காட்டும். சரி, இப்போது அந்த ஆரஞ்சு பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!
ஆரஞ்சு மற்றும் தயிர்
ஆரஞ்சு பழச்சாற்றினை சிறிது எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமமானது பொலிவோடு இருக்கும்.
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மைதா
மைதாவில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் தேன்
2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாற்றில், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
ஆரஞ்சு, முல்தானி மெட்டி மற்றும் பால் பவுடர்
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
ஆரஞ்சு தோல் பவுடர் மாஸ்க்
ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து பொடி செய்து, பின் அதில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது சந்தன பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் இருந்தாலும் போய்விடும்.
 
alakukurippu, saruma paramarippu, thoodai, thodampala thoolil alaku sathanam, veeddil thayarikkum alaku sathanam, ilakuwana alaupaduththal,alakana  kannankaluku

No comments :

Post a Comment