Monday, November 3, 2014
ஆரோக்கியமான தலைமுடியைப் பெற உடனே டயட்ல இத சேர்த்துக்கோங்க...

உணவுகள் என்பது நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியமான
உணவுகளை உண்ணும் போது, நம் உடல்நலமும் ஆரோக்கியமாக இருக்கும். அவ்வகை
உணவுகளினால் கிடைக்கும் பயன் உடல்நலத்திற்கு மட்டுமல்லாது, உங்கள் தலை
முடிக்கும் கூட பொருந்தும்.
அதனால் பளபளப்பான, அழகிய தலை முடியை நீங்கள் பெற வேண்டுமானால், உங்கள்
சாப்பாட்டு தட்டில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்திடுங்கள். திடமான
மற்றும் பளபளப்பான தலை முடிக்கான ரகசியம் விலை மதிப்புள்ள ஷாம்புவோ அல்லது
சலூன் சிகிச்சையோ அல்ல; நாம் உண்ணும் உணவுகளை பொறுத்தே அது அமையும்.
ஆரோக்கியமான பல உணவுகளை நீங்கள் உட்கொண்டு வந்தால், நீங்கள் கனவு கண்ட
அழகிய தலை முடியைப் பெறலாம். அதனால் ஆரோக்கியமான முடியை வளர்க்க கீழ்கூறிய
ஊட்டச்சத்துக்களை இன்றே உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரும்பு மற்றும் ஜிங்க்
மயிர் கால்களின் வலிமைக்கும், அதன் வளர்ச்சிக்கும் இரும்பும் ஜிங்கும்
உதவிடும் என கிளீவ்லேண்ட் கிளினிக்கில் உள்ள தோல் மருத்துவரான வில்மா
பெர்க்ஃபெல்ட், MD கூறியுள்ளார்.
மேலும் இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் வளமையாக உள்ள மாட்டிறைச்சியை வாரம்
இருமுறை உண்ணுமாறு அவர் பரிந்துரைத்துள்ளார். சோயா பீன்ஸ் அல்லது முளைத்த
பயறுடன் வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான ஆரஞ்சு போன்றவற்றை சேர்த்து
உட்கொண்டால், இரும்புச்சத்து உறிஞ்சுவது மேம்படுத்தப்படும்.
வைட்டமின் டி
உங்கள் தலை முடியின் வளர்ச்சியை மேம்படுத்த வைட்டமின் டி உதவிடும் என பல
ஆய்வுகள் கூறியுள்ளது. சில உணவுகளில் இது இயற்கையாகவே அடங்கியுள்ளது.
அதேப்போல் தினமும் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் தென்பட்டால் போதும்,
உங்கள் உடலில் தானாக அது உற்பத்தியாக தொடங்கிவிடும்.
ஆனால் அப்படி செய்வதால் தீமையான புறஊதா கதிர்களில் அதிகமாக வெளிப்படும்
நிலை ஏற்படுவதால், பல வல்லுனர்கள் இதற்கு எதிராக உள்ளனர். தினமும் 1000 IU
அளவிலான வைட்டமின் டி அடங்கிய உணவை உட்கொள்ளுங்கள்.
புரதம்
புரதம் என்பது வாழ்க்கையின் கட்டிட தொகுதிகளில் ஒன்றாகும். இது அணுக்களின்
வளர்ச்சியையும், பழுது பார்த்தலையும் ஊக்குவிக்கும். மேலும் தலை முடியின்
வலிமையையும் மேம்படுத்தும்.
பெண்களுக்கு தினமும் குறைந்தது 46 கிராம் (3 அவுன்ஸ் சிக்கனில் 23 கிராம்
உள்ளது) அளிவிலான புரதச்சத்து கிடைக்க வேண்டும். தினமும் எவ்வளவு புரதம்
எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக தீர்மானிக்க இதனை பின்பற்றவும்.
ஒமேகா-3 கொழுப்பமிலங்கள்
தலை முடிக்கு நீர்ச்சத்து கிடைக்க கொழுப்பள்ள மீனை (கிழங்கான் மீன்) வாரம்
இரு முறை உண்ணுங்கள். இல்லையென்றால் தினமும் 1 கிராம் அளவிலான DHA மற்றும்
EPA ஆகியவற்றை கொண்டுள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
பளபளப்பான தலை முடியை பெறுவதற்கு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை போக்கவும், இதயத்திற்கு உதவவும் செய்கிறது ஒமேகா-3.
பயோடின்
தலை முடியின் வளர்ச்சிக்கு அதிமுக்கிய வைட்டமினான பி முட்டையில் வளமையாக
உள்ளது. இதுப்போக புரதம், கோலின் மற்றும் வைட்டமின் டி-யும் கூட முட்டையில்
வளமையாக உள்ளது. உங்களுக்கு முட்டை பிடிக்காதா? அப்படியானால் 30 mcg
அளவிலான பயோடினை கொண்டுள்ள உணவை தினமும் உண்ணுங்கள்.
alakukurippu, aarookiyam, arokiyamana thalaimudiyay pera, udal arokiyathukana unawu, unawil ulla maruththuwam, unawu palakkam, arokiyamana unawu
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment