Sunday, November 9, 2014

ப்ரியாவை கரம் பிடித்தார் அட்லி! (படங்கள் இணைப்பு)

No comments :
இயக்குநர் ஷங்கர் தாலி எடுத்து கொடுக்க, இயக்குநர் அட்லி – நடிகை ப்ரியா திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். முதல்படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த அட்லி, தனது 2வது படமாக விஜய்யை இயக்க இருக்கிறார். அட்லி, கனா காணும் காலங்கள் டிவி தொடரிலும், சிங்கம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் நடித்த நடிகை ப்ரியாவை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் ஓ.கே. செல்ல திருமணம் செய்ய முடிவெடுத்து, செப்டம்பர் மாதம் நிச்சயமும், இன்று(நவ. 9ம் தேதி) திருமணமும் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அட்லி – ப்ரியா திருமணம், சென்னையில் இன்று சிறப்பாக நடந்தது. இயக்குநர் ஷங்கர் தனது கையால் தாலி எடுத்து கொடுக்க, அட்லி, ப்ரியா கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் இயக்குநர்கள் ஷங்கர், பாலா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
thiraiththakaawal, nadikaiyai manam mudiththa iaykkunar, thirumanam, thirai thirumanam

No comments :

Post a Comment