Sunday, November 9, 2014

வெற்றி தோல்விக்கு தயாரிப்பாளரே காரணம்: சமந்தா

No comments :
 
 
 
நடிகை சமந்தா நடித்த அண்மைய படங்கள் ‘கத்தி’யைத் தவிர மற்ற தமிழ் படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன. அதைப் பற்றி நிருபர்கள் சமந்தாவிடம் கேட்டதற்கு, “நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன.
சில படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.“தோல்வி அடைந்ததற்காக வருத்தப்பட்டது இல்லை. வெற்றி பெற்றதற்காக ஆனந்தக் கூத்தாடியதும் இல்லை.
வெற்றி–தோல்வியில் எனக்குச் சம்பந்தமில்லை என்பது போல்தான் இருப்பேன். அந்த வகையில் நான் ஒரு சுயநலக்காரி. “படங்களில் என் கதாபாத்திரம் என்ன?
எப்படி நடித்தேன் என்பதைத்தான் பார்ப்பேன். தோல்வி அடைந்த படங்களில் கூட நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்று பாராட்டுகள் கிடைத்துள்ளன. எனவே என்னைப் பொறுத்தவரை படம் நன்றாக ஓடாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் என் நடிப்பைப் பாராட்டுவதை கேட்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
“படங்கள் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றாலும் அதன் முழு பொறுப்பும் தயாரிப்பாளரைத்தான் சேரும். அவர் தேர்வு செய்த கதையும் இயக்குநரும் சரி இல்லாததால் படங்கள் தோற்றன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நடிகர்கள் அதற்கு பொறுப்பு ஆக முடியாது.
 
vetti thoolvi, thirai thakawal, nadikai peetti, iyakkunare karanam, nadikaiyin karuththu

No comments :

Post a Comment