Sunday, November 9, 2014

லிங்காவுக்கும் கத்திக்கும் சம்பந்தமில்லை - சர்ச்சைக்கு லிங்கா தயாரிப்பாளர் விளக்கம்

No comments :
 
 
கத்தி படத்தில் சொல்லப்பட்ட தண்ணீர் பிரச்சனைதான் லிங்கா படத்தின் மையம். கத்திப் படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் ஏறக்குறைய லிங்காவிலும் உள்ளன. இரண்டும் ஒன்றுபோல் இருப்பதால் சில காட்சிகளை மறுபடியும் படமாக்குகின்றனர் என்று சில நாள்களாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சு.
அதனை உறுதி செய்வதுபோல், டாக்கி போர்ஷன் முழுதாக முடிந்துவிட்டது, ரஜினி டப்பிங்கும் பேசிவிட்டார் என்று அறிவித்த பின் சென்னையில் சில காட்சிகளை படமாக்கயிருப்பதாக லிங்கா தரப்பு திடீரென்று அறிவித்துள்ளது.
உண்மையில் என்ன நடக்கிறது?
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினியின் அறிமுகப் பாடல் காட்சியோடு லிங்கா படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் சென்டிமெண்டாக சென்னையில் படப்பிடிப்பை நிறைவு செய்யவிருப்பதால் ஒன்றிரண்டு சின்ன காட்சிகளை மட்டும் படமாக்கயிருக்கிறார்களாம். மற்றபடி கத்தி வேறு லிங்கா வேறு இரண்டுக்கும் சம்பந்தமேயில்லை என தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அடித்துச் சொல்கிறார்.
நம்புவோம்.
 
thirai thakawal, linkakum athiikum thodarpu, thanner pirachchanai, kaththipadam,

No comments :

Post a Comment