Saturday, November 15, 2014
கடலை பருப்பு ஃபேஸ் பேக்

தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ,
துளசி இலை 50 கிராம்,
வேப்பங்கொழுந்து 5 கிராம்...
இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு
துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு பேக் போட்டு 10 நிமிடம் கழித்து
வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.
வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
எண்ணை வடிகிற முகம் என்றாலே, பருக்களின் தொந்தரவும் இருக்கும். பல
தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு கடலைபருப்பில் அட்டகாசமான சிகிச்சை
இருக்கிறது.
கடலைபருப்பு 1 ஸ்பூன்,
மிளகு நான்கு- இவற்றை ஏடெடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுத்து அரைத்து
கொள்ளுங்கள். இதனுடன், கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து
கலக்குங்கள்.
பிறகு, இதை முகத்தில் பேக் ஆக போட்டு, உலர்ந்ததும் அலசுங்கள். பருக்கள்
இருக்கும் இடத்தில் மட்டும் அவற்றை மூடுவது போல் கொஞ்சம் அதிகமாகப் பூச
வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வாருங்கள்... பருக்கள் இருந்த இடம்
தெரியாமல் மறைந்து போகும்.
alakukurippu, mukaparu neenka, kadalai parupu, muka alakuku, alaku, mukaththai alakaaka, mukam palapalakka
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment