Thursday, January 22, 2015
சிவபெருமானை விழுங்கிய பெண் தெய்வத்தை பற்றிய கதை!!!

தன்னுடைய கணவனாகிய சிவபெருமானை பார்வதி தேவி விழுங்கியது உங்களுக்கு
தெரியுமா? இது உண்மையா என நீங்கள் வியக்கலாம். ஆம், உண்மையே! துமாவதி
வடிவத்தில் இருந்த பார்வதி தேவி சிவபெருமானை விழுங்கினார்.
பின்னர் இதனால் அசிங்கமான விதவை கோலத்தை கொண்டார். துமாவதி என்றால் புகை என
அர்த்தமாகும். துமாவதி தேவி என்பவர் 10 மகாவித்யாக்களில் ஏழாவது
வடிவமாவார். இந்த வடிவத்தில், சிவபெருமான் இல்லாமல் ஒரு விதவையாக அவர்
சித்தரிக்கப்பட்டுள்ளார். புகையின் மேனி நிறத்தை கொண்ட இவர் காகம் படம்
போட்ட கொடி பார்க்கும் ரதத்தில் வருவார்.
சில நேரம் காகத்தின் மீது பயணம் செய்த படி வருவதை போலவும்
சித்தரிக்கப்பட்டுள்ளார். உயரமாக உள்ள இவர் தூய்மையான வெண்ணிற ஆடைகளை
அணிந்திருப்பார். மிகவும் அசிங்கமாக இருக்கும் இவர் கோபம், பேராசை, துயரம்,
தோல்வி, வேதனை, தனிமை மற்றும் அவமானம் போன்ற எதிர்மறையான எண்ணங்களை
கொண்டிருப்பார்.
எரியும் நிலத்தின் மீது அவர் வசித்திருப்பார். இவ்வகையான சோர்வுடைய
குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும், இயற்கைக்கு மாறான திறன்கள் மூலமாக தன்
பக்தர்களை ஆசீர்வதித்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவார் இந்த கடவுள்.
சிவபெருமானை விழுங்கி, பின் விதவையான இந்த கடவுளின் கதையைப் பார்க்கலாமா?
துமாவதியின் கதை துமாவதி கடவுள் பற்றி பலவிதமான கதைகள் நிலவுகிறது.
அதில் ஒன்று தான் இது; ஒரு முறை பார்வதி தேவிக்கு பயங்கரமாக பசி எடுத்த
போது, அவருக்கு உணவு கிடைக்கவில்லை.
அதனால் தன் கணவனான சிவபெருமானிடம் கொஞ்சம் உணவளிக்குமாறு கேட்டார். சிறிது
காத்திருக்க சொல்லி விட்டு தவம் புரிய அவர் சென்று விட்டார். தன் பசியை
பொறுக்க முடியாத பார்வதி தேவி, மிகுந்த கோபம் கொண்டார். காளி வடிவை எடுத்து
சிவபெருமானை உட்கொண்டார். சிவபெருமானை சாப்பிட்ட பிறகு தான் அவரின் அகோர
பசி அடங்கியது.
நெற்றிக்கண்ணை திறந்த சிவன் இருப்பினும் தன்னை பார்வதி தேவி
விழுங்கியதை உணர்ந்த சிவன் கோபம் கொண்டார். தன் நெற்றிக்கண்ணை சிவபெருமான்
திறந்து விட்டதால், பார்வதி தேவியால் அதீத ஆற்றலை கொள்ள முடியவில்லை.
சிவபெருமானின் எரிக்கும் ஆற்றலால் அவர் புகையாக மாற தொடங்கினார். தன் தவறை
சீக்கிரமே உணர்ந்த பார்வதி தேவி சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டார்.
சிவபெருமானை வெளியே எடுத்தார். கோபத்தில் இருந்த சிவபெருமான், பார்வதி தேவி
ஒரு விதவையைப் போல் வலம் வர வேண்டும் என சாபமளித்தார்.
துமாவதியின் மற்றொரு கதை துமாவதி தேவியைப் பற்றி மற்றொரு கதை
உள்ளது. அதன்படி, தன் பக்தர்களை காக்க, தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவர்
சிவபெருமானை விழுங்கியுள்ளார். ஒருமுறை மல்லா என்ற அகோரி துறவி, தன்னை
அனைத்து விதமான பிரபஞ்சம் சம்பந்தமான வலிமைகளில் இருந்து பாதுகாக்குமாறு
காளி தேவியிடம் வரம் கேட்டார்.
இந்த வரத்தைப் பெற்ற பின் மனித இனத்திற்கு அழிவை ஏற்படுத்த தொடங்கினார்
அந்த துறவி. அகோரா வடிவத்தை எடுத்து அந்த துறவியை கொல்ல முயன்றார்
சிவபெருமான். ஆனால் தன் சத்தியத்தை காக்க மல்லாவை பாதுகாக்க வந்தார் காளி
தேவி. சிவபெருமான் மல்லாவை கொல்லாமல் இருக்க, காளிதேவி சிவபெருமானை
விழுங்கி, பின் விதவையானார்.
விதவை துமாவதி தேவி அதனால் தான் துமாவதி ஒரு விதவையாக
சித்தரிக்கப்பட்டுள்ளார். கணவன் இல்லாமல் இருக்கும் ஒரே மகாவித்யா இவர்
மட்டுமே. இவரை அதிர்ஷ்டம் இல்லாதவராகவும், அமங்கலமானவராகவும்
கருதுகின்றனர். திருமணமான தம்பதிகள் துமாவதி தேவியை வணங்க வேண்டாம் என
பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இவரை வணங்கினால் தனிமை உணர்வும், உலகத்தின் சந்தோஷங்கள் மீது அதிருப்தியும்
ஏற்படும் என நம்பப்படுகிறது. அதனால் தந்த்ரிகள் மற்றும் உலகத்தின் ஆசைகளை
துறந்தவர்கள் மட்டுமே துமாவதி தேவியை வணங்குவார்கள்.
விதவை துமாவதி தேவி துமாவதி தேவியை அமங்கலமானவராக, பயத்தை
ஏற்படுத்துபவராக பார்த்தாலும் கூட, தன் பக்தர்கள் நினைத்ததை அருளும்
கடவுளாக இருக்கிறார். அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தன் பக்தர்களை
காப்பாற்றுகிறார். கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு, இரவு நேரத்தில்
சுடுகாட்டில் தான் இவரை வணங்க வேண்டும்.
இவரை வணங்கும் முன், நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து, மௌனமாகவும்
இருக்க வேண்டும். துமாவதி கோவில்கள் அரிதாகவே காணப்படும். துமாவதி தேவியின்
மிகவும் புகழ்பெற்ற கோவில் வாரணாசியில் உள்ளது.
இங்கே வழக்கத்திற்கு மாறான பொருட்களை கொண்டு அவரை வணங்குவார்கள். பழங்கள்
மற்றும் பூக்களுடன் மாமிசம், பாங்கு, மதுபானம், சிகரெட் மற்றும் இரத்த
பலிகள் கூட இவருக்கு படைக்கப்படும்.
தன் கணவனை விழுங்கிய கொடூரமான கடவுளாக இருந்தாலும் கூட, அருமையான சக்திகளை கொண்டுள்ள விதிவிலக்கான கடவுளே துமாவதி தேவி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
சூப்பர்
ReplyDelete