Thursday, January 22, 2015

மின்னுவதெல்லாம் பொன்னல்ல – காதல் கதை

No comments :
 
 
சாரா ஆச்சரியமாக சுற்றும் முற்றும் பார்த்தாள். நீண்டு உயர்ந்து வளர்ந்து நிற்கின்ற இந்த பனை மரங்களும், பச்சை பசேல் என்ற இந்த வயல் தோட்டங்களையும் காண அவளுக்கு சந்தோசமாக இருந்தது. அடே இவ்வளவு பெரிய இடத்தில் தங்கை ஜனாவுடன் ஓடி விளையாட வேண்டும் போல் இருந்தது அவளுக்கு . 
ஆசையுடன் வயல் வெளியில் மெல்ல இறங்கினாள் . அங்கே தூரத்தில் ஒரு வயதானவர் குனிந்தபடியே பயிர்களுக்கு பசளை தெளித்துக்கொண்டிருந்தார். அவரை நோக்கி நடக்க தொடங்குகையில் அம்மா „சாரா சாரா என்று கூப்பிடுவது கேட்டு திரும்பிப்பார்த்தாள். 
என்ன பிள்ளை சாரா நாங்கள் இப்படியே ராஜி ஆண்ட்டியை பார்க்க போய் கொண்டிருக்கிறோம் . அதற்குள் என்ன இந்த வயலுக்குள் இறங்கி விட்டாய் . வா நேரமாகி விட்டதல்லவா , உனக்கு காணாதத கண்ட களிப்பில் எல்லாத்தையும் நின்று நின்று பார்க்கிறாய் . 
போதும் வா இப்ப . இன்னொரு நாள் வந்து எல்லாவற்றையும் ஆற அமர இருந்து ரசி“ . அம்மா விடுவிடுவென்று நடக்க தொடங்கினார் . சாராவும் வேறு வழி இல்லாமல் மீண்டும் தெருவில் ஏறி அம்மாவை பின்தொடர்ந்தாள் .
சாரா லண்டன் நாட்டில் வசிப்பவள் . விடுமுறையைக் கழிக்க அம்மா அப்பாவுடன் மிக நீண்ட காலங்களுக்கு பின் இலங்கை வந்திருக்கிறாள் . அங்கே லண்டனில் மிக நெருக்கமாக உள்ள வீடுகளும் பெரிய பெரிய கட்டிடங்களையுமே கண்டு சலித்துப் போயிருந்த சாராவுக்கு இங்கே யாழ்ப்பாணத்தில் கொட்டிக்கிடக்கும் இயற்க்கை அழகை கண்டு அவள் சொக்கிப் போயிருந்தாள். 
வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்திருந்த அவளுக்கு ஆனாலும் இங்கைய சூழ்நிலை ஏனோ பிடித்திருந்தது . ராஜி ஆண்ட்டியின் வீடு நெருங்கியதும் அம்மா மீண்டும் ஒரு முறை சாராவை மேலும் கீழும் பார்த்தார். „சாரா அப்பவே சொன்னன் . ஒரு சட்டையை போட்டிட்டு வந்திருக்கலாம் தானே . இந்த ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வந்திருக்கிறாய் . ராஜி ஆண்ட்டி உன்னை பார்த்து என்ன நினைக்கப்போகிறாவோ . உன்னால எனக்கு தான் அவமானம் . ம் , சரி வா உள்ள போவோம் . அவர்கள் உள்ளே செல்ல எத்தனிக்கையில் ஒரு இளைஞன் வீட்டிலிருந்து வெளியே வந்தான் . மிகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் காணப்பட்ட அவ் இளைஞனின் முகத்தில் கோபம் கொத்தளித்துக் கொண்டிருந்தது. இவர்களைக் கண்டதும் திடுக்கிட்டவன் ஒருவாறு சமாளித்தவாரே „ஒ! ஆன்ட்டியா வாருங்கள் அம்மா உள்ளே தான் இருக்கிறார்“ என்று உபசரித்தான் . 
அப்படியே சாராவின் மேல் பாய்ந்த அவனது பார்வை ஏனோ சுருங்கியது . ஒரு கணம் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு தனக்குள் அவன் போட்ட கணக்கில் இவள் தேர்ச்சி பெறவில்லை என்பது போன்று ஏளனமாக உதட்டை பிதுக்கியபடியே „ஆண்ட்டி நான் வேறு வேலையாக கிளம்புகிறேன். இன்னொரு நாள் இயலுமாயின் சந்திக்கிறேன்“ என்று மிக விரைவாகவே வெளியேறினான். சாராவிற்கும் மனதினுல் கோபம் . இவன் யார் என்னை எடைபோடுவதற்கு . 
உள்ளே சென்றவர்களை ராஜி ஆண்ட்டி மிக அன்பாக வரவேற்றார் . ராஜி ஆண்ட்டியும் அம்மாவும் பள்ளித்தோழிகள் . இருவரும் நீண்ட காலத்தின் பின் சந்திப்பதனால் தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். பேச்சு வார்க்கிலேயே ராஜி ஆண்ட்டி சாராவைப் பற்றி முழு விபரத்தையும் அறிந்துக் கொண்டார் . சாரா பொதுவாகவே நல்ல பண்பாடுகள் கொண்ட பெண் . 
கள்ளம் கபடமில்லாமல் எந்நேரமும் சிரித்த முகத்துடன் காணப்படுபவள். ராஜி ஆண்ட்டி இவர்களுக்கு தேநீர் கொண்டு வருவதற்காக எழுகையில் சாரா அவரை இடை மறித்து „ஆண்ட்டி உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நானே சென்று தயார் செய்து கொண்டு வருகிறேன் . அம்மா உங்களை மிக நீண்ட நாட்களின் பின் சந்திக்கிறார் . 
உங்கள் இருவருக்கும் எவ்வளவோ அளவளாவ இருக்கும் . நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் . இதோ தயார் செய்துக் கொண்டு வருகிறேன்“ என்று துள்ளலுடன் சமையல் அறையை தேடிச்சென்றாள் . ராஜி ஆண்ட்டி ஆச்சரியத்துடன் சாரா செல்வதை நோக்கியவர் மனதில் நிச்சயமாக ஒரு திட்டம் தீட்டியதை அந்நேரம் சாரா அறிந்திருக்கவில்லை . ஒருவேளை அறிந்திருந்தால் அவள் எழும்பியே சென்றிருக்க மாட்டாளோ என்னவோ .
„அம்மா என்னம்மா சொல்றீங்கள் ? நான் இன்னும் படிக்க எவ்வளவோ இருக்கையில் அதுக்குள் என்னம்மா எனக்கு அவசரம் இந்த கல்யாணத்துக்கு அப்பா கொஞ்சம் அம்மாவிடம் தான் சொல்லுங்களேன் . பிளீஸ் ..!“. சாரா அம்மாவிடம் எவ்வளவோ கெஞ்சியும் ஒன்றும் பலிக்காமல் அவளுக்கு கலியாணம் ஏற்பாடு முடிவாகி விட்டது . 
அதற்கான அம்மாவின் ஒரே காரணம் இந்த வெளிநாடுகளில் பெண் பிள்ளைகளை நேரத்துக்கு ஒரு நல்லவனிடம் ஒப்படைத்தால் தான் உண்டு அல்லாவிடில் நாம் தான் பின்னர் கவலைப்பட வேண்டி வரும் . அப்பாவும் அதற்கு சம்மதித்தது தான் சாராவுக்கு புரியாத புதிராக இருந்தது . இனி அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை .
சாராவின் மனதில் ஏமாற்றம் பரவுவதை அவளால் தடுக்கவே முடியவில்லை . கொஞ்ச காலமாக அவள் மனதிலும் எதோ ஆசை துளிர் விட்டிருந்தது . அவளது பல்கலைகழக இந்திய சக மாணவன் அஜித் அடிக்கடி இவளிடம் பேச்சு கொடுப்பதும் பாடங்கள் முடிந்து வீடு திரும்பும் பொழுது இவளுக்காக காத்திருந்து இருவரும் சேர்ந்தே பஸ் தரிப்பிடம் வரை கதைத்த படியே வருவதும் இவளுக்கு எதையோ உணர்த்தியது . 
இவள் மனமும் லேசாக அஜித்திடம் சாய்வது போலவும் உணர்ந்தாள். ஆனால் அதற்குள் அம்மா என்னவோ கல்யாணம் கச்சேரி என்று ஏற்பாடு செய்கிறாவே. சரி யாரை தான் பார்த்து வைத்திருக்கிறாவோ. சந்தித்தவுடன் பிடிக்கவில்லை என்று கூறிவிட வேண்டும் . அதற்கு பின் என்ன வலுக் கட்டாயமாகவா திருமணம் செய்து வைப்பார்கள் .
சாரா மனதில் திடமாக முடிவு எடுத்திருக்கையில் அதே நேரம் யாழ்ப்பாணத்தில் இவளுக்கு முடிவாகி இருந்த ராகவன்யின் வீட்டிலும் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது. ஆமாம் , ராகவன் தன் தாய் „ராஜியிடம் அம்மா எனக்கு எப்படி நீங்கள் திருமணம் நிச்சயிக்கலாம் . உங்களுக்கு நன்றாகவே தெரியும் நான் மதுவை காதலித்துக் கொண்டிருப்பது. மது எவ்வளவு நல்ல பெண் . மிகவும் அடக்கமான குடும்பத்துக்கு ஏற்ற பெண் . அப்படியிருக்கையில் நீங்கள் உங்கள் நண்பியின் பெண்ணை திருமணம் செய்ய கேட்பது நியாயமாகுமா?. 
அம்மா நான் அவளை கண்டிருக்கிறேன் . அழகான பெண் தான். நான் அதை மறுக்கவில்லை . ஆனால் அவள் அணியும் உடையணிகளைப் பார்த்தீர்கள் தானே . பெயரும் எதோ வெள்ளைகாரியின் பெயர் . அப்படியே மேல் நாட்டு நாகரீகம் அவளில் குடிக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பெண் எப்படி எமது கலாச்சாரத்திற்கு ஒத்து வரும் . 
தயவு செய்து எனக்கு மதுவையே மணம் முடித்து தாருங்கள் . எனக்கு உங்களது இந்த பிடிவாதம் புரியவே இல்லை அம்மா“ என்று வாக்கு வாதப்பட்டான் . ஆனால் அவன் தாய் ராஜியோ மகன் ரராகவன் „மின்னுவதெல்லாம் பொண்னல்ல அதை நீ புரிந்துக்கொண்டால் உன் வாழ்வு செழிக்கும்“ என்று மட்டும் கூறிவிட்டு தன் எண்ணத்தில் மட்டும் திடமாக இருந்தார் . அதற்கிடையில் மதுவுக்கு திடீரென அவர்கள் வீட்டில் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து கலியாணமும் செய்து அவளை உடனே அனுப்பியும் விட்டார்கள் . 
எல்லாமே கண் முழிக்கும் நேரத்திற்குள் நடந்தது போலாகிவிட்டது . ராகவனினால் மதுவை சந்திக்க முடியவே இல்லை . அவள் மணம் என்ன பாடு பட்டிருக்கும் என்று எண்ணியே இவன் மிகவும் நொந்து போனான் . இது தான் தருணம் என்று ராஜியும் அப்பன் ராகவன் இனி உனக்கு இந்த ஊரில் இருக்காமல் லண்டன் சென்று விடு . உன்னுடைய படிப்பிற்கு ஏற்ற வேலையை எனது நண்பியின் கணவர் அது தான் சாராவின் தந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் . அவர்கள் எமக்கு எத்தனையோ வழிகளில் உதவி செய்திருகிறார்கள் . 
அவற்கு எல்லாம் நன்றி கடனாகவேணும் சாராவை மறுக்காது கல்யாணம் செய் . உனக்கு ஏற்ற மனைவி சாரா தான் . மது இல்லை . நான் கூறுவது பிழை போகாது . நீயே மிக விரைவில் அதை உணருவாய் . ராஜி இவன் கிளம்பு வதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார் .
 சாரா மாப்பிளை யார் என்று தெரிந்தவுடன் முற்றாகவே மனம் உடைந்து போனாள். அம்மா எப்படி அம்மா அந்த ராகவனை எனக்கு பேசுவீர்கள் . நீங்களே கண்டீர்கள் அவன் என்னை ஏளனமாக பார்த்ததை. அப்படியிருக்கையில் …. எனக்கு அந்த ராகவன் மட்டும் வேண்டாம் . அங்கே ஊரில் பிறந்த வளர்ந்த ஒருவர் எப்படி இந்த வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஒத்துப்போக முடியும். எம்மிருவருக்கும் பொருத்தமே இல்லை . 
அப்படியிருக்கையில் நீங்களும் ராஜி ஆண்ட்டியும் எதோ முடிவெடுத்திருக்கிறீர்கள் . இரு பகுதியிலிருந்தும் மணமக்கள் தயக்கம் காட்டினாலும் அவர்கள் பெற்றோரின் ஓயாத வற்புறுத்தலினால் அவர்களுக்காக சம்மதிக்க ராகவனுக்கும் சாராவாகிய சாரிகாவுக்கும் இனிதே திருமணம் முடிந்தது .
புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் சகித்து அனுசரித்து வாழவேண்டிய நிலையில் புதுக்குடித்தனம் தொடங்கினர் . இயல்பிலேயே சாரா பண்பான குணயியல்புகளை கொண்டவள் . 
முன்பின் அறிமுகமில்லாதவர்களிடமும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்து நட்புடன் பழகக் கூடியவள் . அப்படிப்பட்டவள் ராகவனை நண்பராக உடனே ஏற்றுக்கொள்வாள் . ஆனால் ராகவனை பழகாது அவனது குணயியல்புகளை தெரியாது அவனுடன் சேர்ந்து வாழ்வது என்பதை நினைக்கையில் தான் சாரா தடுமாறத் தொடங்கினாள். அவளது நண்பிகள் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அந்நபரை நீண்ட காலத்துக்குப் பழகி தமக்கு ஒத்துப்போக கூடியவரா என்பதை நன்கு ஆராய்ந்தே திருமணத்துக்கு சம்மதிப்பர். 
அதுவும் சிலர் சேர்ந்து வாழ்ந்தே எத்தனையோ காலங்களின் பின்னர் திருமண பந்தத்தில் இணைவர் . அப்படியிருக்கையில் அம்மாவின் சந்தோஷத்துக்காக ஏதோ தான் ஒரு நல்ல மகள் என்பதை நிருபிக்க ராகவனை கல்யாணம் செய்ய ஒப்புக் கொண்டு இப்பொழுது முழிக்க தொடங்கினாள் . 
இவளது நிலையே கிட்டதட்ட ராகவனுக்கும் . அவனுக்கு மது தான் தனக்கு பொருத்தமான மனைவி. மேலைத்தேய சூழ்நிலையில் வளர்ந்த இந்த சாரா எப்படி தனக்கு ஒத்து வருவாள் என்று மனம் குழம்பினான் . 
இவளது உடைகளும் வித்தியாசம் . எப்பொழுது பார்த்தாலும் ஜீன்ஸும் டிஸ்ர்டுமே அணிகிறாள். அவளது ஆங்கிலம் கலந்த தமிழை சிலவேளை அவனால் விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை . திருப்பி சொல்லும்படி கேட்க வேண்டி இருக்கு. ஆனாலும் அவன் திரும்பி சொல்லும்படி கேட்டவுடன் சாரா சிறு வெட்கத்துடன் மெதுவாக நல்ல தமிழில் கூற எத்தனிக்கையில் அவள் மிகவும் அழகாக தோன்றுவதை அவனால் மறுக்க முடியவில்லை .
இருவருமே ஒரு தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர் . சாரா சமாளித்தவண்ணம் ராகவனுக்கு ஏற்ற வண்ணம் தன்னை மாற்றிக்கொள்ள எத்தனித்தாள். காலையில் கோப்பி போட்டு காலை உணவுக்கு பிரட் சான்விட்ச் என அவன் எழும்புவதற்கு முன்னரே தயார் நிலையில் வைத்தாள் . அப்படியே தயங்கிய படியே மதிய உணவைப்பற்றியும் விசாரித்தாள். ராகவன் தனது மதிய உணவை தனது நிறுவனத்திலேயே பார்த்துக்கொள்ள போவதாக குறிப்பிட்டவுடன் சாரா அப்பாடா என்று பெருமூச்சு எடுத்தாள் . ஏனென்றால் அவளும் தொடர்ந்து படிப்பதற்காக கல்வி நிறுவனதிற்கு ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டி இருந்தது . காலையில் ராகவனுக்கு மதிய உணவு தயாரித்து கொடுப்பது என்பது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் . இவளது முக மாற்றத்தை கவனித்த ராகவனுக்கோ மனதினுள் மிகவும் கோபமாக இருந்தது . மதுவாக இருந்திருந்தால் தனது படிப்பு தான் முக்கியம் என கிளம்புவாளா என்ன. வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருந்து சோறு கறிகள் என சமைத்து நான் வேலை முடிந்து வரும் வரை ஆசையோடு காத்திருப்பாளே. இந்த அம்மாவுக்கு அவள் அருமை எங்கே தெரியப்போகிறது . நான் இவள் சாராவை கட்டி கவலைப்பட வேண்டியது எனது தலை எழுத்து . இன்று இரவு வேலை முடிந்து களைப்புடன் வந்தாலும் இவள் திரும்பியும் பானைத்தான் வைக்கப்போகிறாளோ என்னவோ மனதினுள் முனு முனுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பிச்சென்றான் .
காரை வீட்டில் வந்து நிறுத்துகையில் ராகவனுக்கு ஒரே சலிப்பாக இருந்தது . அன்று வேலைத் தளத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்ததினால் வேலை முடிந்து வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுக்க மனம் விரும்பினாலும் சாராவை நினைக்கையில் அவன் சோர்ந்தான் . எனது தலை எழுத்து இப்படியாகி விட்டது . யாரை நொந்து என்ன செய்வது ! உள்ளே சென்றவனுக்கு சமையல் அறையிலிருந்து வந்த வாசம் அவனை அப்படியே நிறுத்தியது . அந்நேரம் கையை துடைத்தபடியே வெளியே வந்த சாரா இவனைக் கண்டவுடன் ஒரு கணம் திடுக்கிட்டு மற்ற செக்கனே கொஞ்சம் வெட்கம் கலந்த புன்சிரிப்புடன் „அட வந்து விட்டீர்களா ! சமையல் முடிந்து விட்டது . உடை மாற்றிக்கொண்டு வாருங்கள் . நான் சாப்பாட்டு மேஜைக்கு எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறேன்“ என்று திரும்பினாள். ரிஷிக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது . அவசரமாக பசியுடன் உடை மாற்றிக்கொண்டு வந்தவனுக்கு தேவாமிர்தமே படைக்கப்பட்டு இருந்தது . அவனே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு உணவு மிகவும் சுவையாக தாயரிக்கப்பட்டிருந்தன. சாப்பிட்டு கொண்டிருக்கையிலேயே சாரா கொஞ்சம் தயக்கத்துடன் „எனது நண்பிகள் நாளை பின்னேரம் கோப்பி ஷோப்பில் சந்திப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். நீங்களும் வந்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும் . வேலை முடிந்தவுடன் நேரே அங்கேயே வருகிறீர்களா ? நானும் எனது நண்பிகளுடன் உங்களுக்காக அங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்“. சாரா அவனது சம்மதத்திற்காக ஆர்வத்துடன் அவன் முகத்தையே பார்க்க ராகவன் வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னான் . சாராவின் முகம் அப்படியே மலர்ந்தது . ஒரு துள்ளலுடன் எழுந்து சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை அகற்ற முனைந்தாள் . சாரா ஏதோ ஏமாற்றத்துடன் ரிஷியை மணந்தாலும் திருமணம் முடிந்த பிறகு தன் மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டு ரிஷிக்கு ஏற்ற மனைவியாக நடக்க மிகவும் பிரயத்தனம் செய்தாள் . நம் தமிழ் பெண்களின் சுபாவமே அது தான் . மனதினுள் எத்தனையோ கனவுகளையும் ஆசைகளையும் சுமந்திருந்தாலும் அவை நிறைவேறா விட்டாலும் திருமணம் என்று நடந்து விட்டால் அதன் பின் தம்மை தமது புதிய சூழ்நிலைக்கு ஏற்றாப்போல் தம்மை மாற்றிக்கொண்டு வாழப் பழகிக் கொள்வார்கள் . ஆனால் ஆண்களின் நிலையோ இவ்விடயத்தில் வேறாக இருக்கும் .
ஆம் ராகவன் மனதிற்குள் „இவள் சாரா வாய்க்கு சுவையாக சமைத்திருக்கிறாள் என்று பாராட்ட நினைக்கையிலேயே தனது உண்மையான சுபாவத்தை காட்டி விட்டாளே. வீட்டில் அடக்க ஒடுக்கமாக இல்லாமல் தன் நண்பிகளுடன் கிளம்புகிறாள் . இதே மதுவென்றால் இப்படி கிளம்புவாளா . எமது ஊரில் என்றால் வீட்டு வேலைகளை முடித்து வழி மேல் விழி வைத்து தம் தமது கணவரின் வருகைக்கு காத்திருப்பார்களே. நண்பிகளுடன் வெளியே செல்ல நினைத்தும் பார்க்க மாட்டார்கள் . இது தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கும் எமது நாட்டு பெண்களுக்குமுள்ள வித்தியாசம்“ . ராகவன் பெருமூச்சுடன் தனது அறைக்கு சென்றான் .
ராகவன் சாரா ஸம்ஸ் ஊடாக அனுப்பி இருந்த அந்த கோப்பி ஷோப்பின் முகவரியை கண்டு பிடித்து உள்ளே நுழைந்தான் . அவனது கண்கள் சாராவையும் அவள் நண்பிகளையும் ஒரு தரம் தேடின . அவர்கள் ஒரு ஒதுக்கு புறமாக இருந்து கதைத்து சிரித்துக் கொண்டிருந்தனர் . ராகவன் சாராவை கண்டதும் அப்படியே மயங்கி ஒரு கணம் நின்றான். சாரா மிக அழகிய சுரிதார் அணிந்து ஒரு தேவதை போல் காட்சி அளித்தாள். அடடா! எனது மனைவி இத்தனை அழகா என்று அவன் ஒரு கணம் தன்னுள்ளே மலைத்து நின்றான் . அந்நேரம் யாரோ ஒரு பெண் பிழையான ஆங்கிலத்தில் யாருடுனோ மிக பலமாக கதைப்பது கேட்டு திரும்பியவனுக்கு பெரும் அதிர்ச்சியாக போய் விட்டது . ஜீன்ஸும் வெடித்து விடுமோ என்ற அளவுக்கு மிகவும் இறுக்கமாக பிளவுசும் அணிந்து வேறு ஒரு பெண்ணுடன் சிரித்துக்கொண்டு நிற்பது என் மதுவா . என் மது எப்பொழுதும் மிக மென்மையாக கதைப்பவள் அதுவும் எவ்வளவு அடக்கத்துடன் உடை அணிபவள் என்ன இந்த கோலத்தில் நிற்கிறாள் . மது தன் நண்பியிடம் சாராவை காட்டி „அதோ பார்! அந்த பெண் இந்த லண்டன் நகரில் சுரிதாருடன் பட்டிக்காட்டு பெண் போல் வந்திருக்கிறாள் . இவளுக்கு நாகரீகம் ஒன்றும் தெரியாது போல்“ என்று கேலி செய்வது அவன் காதில் லேசாக கேட்டது . மெதுவாக நகர்ந்து மதுவின் கண்ணில் பட்டுவிடாது சாராவின் அருகில் வந்தமர்ந்தான் . சாரா முகம் மலர அவனை நோக்க ராகவன் அவளை மிகவும் கனிவுடன் பார்த்த பார்வையில் மீண்டும் நாணத்துடன் தலை குனிந்தாள். அம்மா ஏன் தான் சாராவை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதம் பிடித்தாள் என்பது அவனுக்கு இப்பொழுது தான் புரிந்தது.

No comments :

Post a Comment