Sunday, November 9, 2014

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஆசிய நிறுவனங்களால் நெருக்கடி

No comments :
கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஆசிய நிறுவனங்களால் நெருக்கடி
சர்வதேச அளவில் பிரபலமான, ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்காக, ‘ஆப்ஸ்’ எனப்படும் செயலி சேவைகளை வழங்கி வருகின்றன. வங்கி கணக்கு பரமாரிப்பு, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்துக்கும், இன்று செயலிகள் வந்து விட்டன. இந்த சேவைகளை வழங்குவதில், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில், ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த, ‘லைன், யாய், விசாட்’ போன்ற நிறுவனங்களும், ஏராளமான செயலிகளை வடிவமைத்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
இதனால், கூகுள், ஆப்பிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு, கடும் சவால் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
செயலி சேவைகளை வழங்கி வரும், குளோன் அல்கோ நிறுவனத்தின், இந்திய பிரிவுக்கான, தலைமை தொழில் நுட்ப நிபுணர், நகுல் குப்தா கூறுகையில், ”ஆசிய நிறுவனங்கள், போன் ரீஜார்ஜ் செய்வது, வாடகை கார் புக்கிங் உள்ளிட்ட, ஏராளமான செயலி சேவைகளை வழங்குவதால், அவற்றுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.
 
nerukkadi, tholinudpa seythikal, aasiya niruwanakalaal nerukkadi, sarwathesa niruwanakal

No comments :

Post a Comment