Wednesday, November 12, 2014
இரண்டாவது மனைவிக்கு டாடா; முதல் மனைவிக்கு ஓ.கே சொன்ன கணவன் சிறையில் அடைப்பு

சென்னையில் இரண்டாவது மனைவியை மறுத்து, முதல் மனைவிக்கு ஓ.கே சொன்ன கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் முனுசாமி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் கடந்த
பிப்ரவரி மாதம் ஒரு பிரபல ஓட்டல் அதிபரின் மகளை காதலித்து திருமணம் செய்து
கொண்டார். இவர்களது திருமணம் 50லட்சம் ரூபாய் செலவில் மிகவும் ஆடம்பரமாக
நடைபெற்றது. ஆனாலும் சமீபகாலமாக இவர்களுக்குள் அடிக்கடி மோதல் நடந்து
வந்துள்ளது.
இந்நிலையில் ரமேஷ்குமார் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்துப் பதிவுத்
திருமணம் செய்தவர் என்ற செய்தி இவர்களது வாழ்க்கையில் பிளவை உண்டாக்கியது.
இதற்கிடையில், 2 மனைவிகளும் ரமேஷ்குமாரை சொந்தம் கொண்டாட இந்த விவகாரம்,
அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது இரண்டு மனைவிகளும், ரமேஷ்குமாருடன் வாழ சம்மதம்
தெரிவித்தனர். ஆனால் அதற்கு ரமேஷ்குமார் 2ஆவது மனைவியை மறுத்து, முதல்
மனைவியோடு வாழ சம்மதம் தெரிவித்தார்.
இதனால் 2ஆவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து
ரமேஷ்குமாரை காவல்துறயினர் கைது செய்தனர். ரமேஷ்குமார் நீதிமன்ற காவலில்
புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
irumanawikal, sirai, kaithu, kanawan kaithu, muthal manawi, ulakaseythikal, inthiya seythikal
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment