Wednesday, November 12, 2014
துப்பாக்கி முனையில் ஒரு மணி நேரம் நடனம் ஆடவைத்த காவலர்

உத்திரப்பிரதேசத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் பெண்ணை காவலர் ஒருவர் துப்பாக்கி முனையில் நடனம் ஆட வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் அருகே ஒரு
திருவிழாவில் கிராமிய நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த
ஒரு காவலர் நடனமாடிக் கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் ஒரு மணி
நேரம் ஆட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
மேலும் அவர், அந்த பெண் நடனம் ஆடும்போது 30ஆயிரம் மதிப்புள்ள 100 மற்றும்
500 ரூபாய் நோட்டுகளை அந்த பெண்ணின் மீது வீசியுள்ளார். அப்போது
பார்வையாளர் ஒருவர், காவலர் மது அருந்தி விட்டு துப்பாக்கி முனையில் ஆட
வைத்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment